பழங்குடிசுதந்திரபோராட்டவீரர்களுக்குபிரதமர்அஞ்சலி

Loading

 

இந்தியா

இந்தியாவின் பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு பிரதமர் மோடியின் அஞ்சலி: நினைவலைகள் முதல் புகழ் வரை

 

காலனித்துவ அதிகாரத்திற்கு எதிராக இந்தியாவின் போராட்டத்தை வடிவமைத்த வீரம் பொருந்திய இந்தியாவின் பழங்குடி நாயகர்கள் பல தசாப்தங்களாக வரலாற்றின் விளிம்புகளிலேயே பெரும்பாலும் இருந்து வந்தனர். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்த நிலை மாறியுள்ளது. நினைவுச் செயல்கள், நினைவுச் சின்னங்கள், வெளியீடுகள், குறியீட்டு வெளியீடுகள் மற்றும் சந்ததியினருடன் நேரடி ஈடுபாடு மூலம், பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதைகள் இப்போது இந்தியாவின் தேசிய பாரம்பரியத்தின் ஒரு மூலக்கல்லாகக் கொண்டாடப்படுகின்றன.

 

பழங்குடி வரலாற்றை உயிர்ப்பிப்பதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் பழங்குடி புரட்சியாளரான பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் நவம்பர் 15-ஆம் தேதியை பழங்குடியின கௌரவ தினமாக மோடி அரசு அறிவித்தது. ஆண்டு வாக்கில் இந்த அனுசரிப்பு பழங்குடியின கௌரவாரமாக விரிவடைந்தது. இந்தியாவின் பழங்குடி பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வீரத்தை எடுத்துரைக்கும் நோக்கத்துடன் 2023-ம் ஆண்டில், ராணி துர்காவதியின் 500-வது பிறந்தநாளை அரசு தேசிய அளவில் கொண்டாடியது.

 

பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர்களின் சந்ததியினருடன் பிரதமர் மோடி நேரடி ஈடுபாடு கொண்டது, வரலாறு என்பது வெறும் நினைவுச் சின்னங்களைப் பற்றியது அல்ல, வாழும் குடும்பங்களைப் பற்றியது என்பதை வலியுறுத்துகிறது. 1817-ம் ஆண்டு ஆயுதமேந்திய புரட்சியில் அவர்களின் துணிச்சலைப் பாராட்டி, பக்ஷி ஜகபந்து, ரிண்டோ மாஜி மற்றும் லட்சுமி பாண்டா உள்ளிட்ட ஒடிசாவின் பைகா கிளர்ச்சி வீரர்களின் குடும்பத்தினரை அவர் பாராட்டினார். பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களில், ​​பிர்சா முண்டா, சிடோ முர்மு, கன்ஹு முர்மு மற்றும் பிற பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர்களின் சந்ததியினர் பங்கேற்றதை பிரதமர் மோடி உறுதி செய்தது, நாடு முழுவதும் உள்ள பழங்குடி சமூகங்களை ஆதரிப்பதில் அரசின் தீவிரத்தை எடுத்துக்காட்டியது. குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம், பிரதமர், வரலாற்றுடன் ஒரு மனித தொடர்பை உருவாக்கியிருப்பதுடன், பழங்குடித் தலைவர்களின் தியாகங்கள் இந்தியாவின் அடையாளத்தைத் தொடர்ந்து வடிவமைக்கின்றன என்பதை உறுதிப்படுத்துகிறார்.

 

பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ், இந்தியாவின் பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சல் பாதுகாக்கப்பட்டு, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 2016-ம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் அறிவித்தவாறு 10 மாநிலங்களில் பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காக 11 சிறப்பு அருங்காட்சியகங்களை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் ராஞ்சி, சிந்த்வாரா மற்றும் ஜபல்பூரில் மூன்று அருங்காட்சியகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், ராய்ப்பூரில் ஷஹீத் வீர் நாராயண் சிங் பெயரிடப்பட்ட பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த இந்தியாவின் முதல் டிஜிட்டல் அருங்காட்சியகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

 

இந்தியாவின் பொது இடங்கள் பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகழையும் பிரதிபலிப்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் பீமாவரத்தில் உள்ள அல்லூரி சீதாராம ராஜுவின் 30 அடி வெண்கலச் சிலை, ரம்பா புரட்சியின்போது அவரது தலைமையைக் கொண்டாடுகிறது. இதேபோல் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிர்சா முண்டாவின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

 

பிர்சா முண்டா, ஷாஹீத் வீர் நாராயண் சிங், கோவிந்த் குரு, சித்து-கன்ஹு, ராணி கைடின்லியு, அல்லூரி சீதாராம ராஜு மற்றும் எண்ணற்ற பழங்குடி வீரர்களின் புகழ் இப்போது பாதுகாக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு, வரும் தலைமுறையினருக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம், இந்தியா தலைவர்களை மட்டுமல்லாமல், போராட்டத்தின் பின்னணியில் இருந்த மக்களையும், குடும்பங்களையும், சமூகங்களையும், நாட்டின் சுதந்திரத்தை வடிவமைத்த எதிர்ப்பு உணர்வையும் நினைவில் கொள்ள வழிவகை செய்யப்படுகிறது.

 

0Shares