தேசிய குழந்தைகள் தினம்விழிப்புணர்வு பேரணி
![]()
இராணிப்பேட்டை
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் இராணிப்பேட்டையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி Walk For Children விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் இராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம், நவம்பர் 18 துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை, நவம்பர் 19 உலக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு தினம் மற்றும் நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினம் முன்னிட்டு இன்று (14.11.2025) கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட Walk For Children விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் நர்சிங் கல்லூரி மாணவிகள் மற்றும் ஐடிஐ மாணவர்கள் என 200க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளான குழந்தைத் திருமணம், இளம் வயது கர்ப்பம், பாலியல் வன்முறை, பள்ளி இடைநிற்றல், போதை பொருள் பயன்பாடு, குழந்தை தொழிலாளர், சமூக ஊடகங்கள் தாக்கம், பாலின வேறுபாடு மற்றும் வேறு எந்த விதமான குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் என் கவனத்திற்கு வந்தாலும் உடனடியாக அக்குழந்தைகளை பாதுகாக்கும் செயலில் ஈடுபடுவேன் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தொடர்ந்து, முத்துக்கடை பேருந்து நிலையம் மற்றும் காரை அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் பண்பாட்டுக் கலை மூலம் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வினில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி.தீ.ரஞ்சித பிரியா, மாவட்ட சமூக நலன் அலுவலர் திருமதி.பாலசரஸ்வதி, குழந்தை நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
வெளியீடு. செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், இராணிப்பேட்டை மாவட்டம்.

