இந்தியாவின் பழங்குடி மறுமலர்ச்சி: பிரதமர் மோடி
![]()
இந்தியாவின் பழங்குடி மறுமலர்ச்சி: பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் புறக்கணிப்பிலிருந்து தேச கட்டுமானம் வரை
பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பழங்குடி என்ற வார்த்தை பெரும்பாலும் வறுமை, பள்ளிகள் இல்லாத தொலைதூர கிராமங்கள், தண்ணீருக்காக பல மைல் தூரம் நடந்து செல்லும் தாய்மார்கள், வாய்ப்புகளைத் தேடி காடுகளைவிட்டு வெளியேறும் இளைஞர்கள் போன்ற தோற்றத்தையே ஏற்படுத்தியது. எனினும் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்த சூழல் உயிர்வாழ்வதிலிருந்து, வெற்றியின் கதையாக மாறியுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமர் மோடி பதவியேற்ற போது, இந்தியாவில் பழங்குடி வளர்ச்சி என்பது வரையறுக்கப்பட்ட கட்டமைப்பிற்குள் ரூ.4,498 கோடி என்ற பட்ஜெட்டுடன் ஒரே அமைச்சகமாக இயங்கியது. கடந்த தசாப்தத்தில் இந்த தொலைநோக்குப் பார்வை தேசிய இயக்கமாக விரிவடைந்துள்ளது. இன்று, 42 அமைச்சகங்கள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டம் மூலம் பழங்குடியினரின் நலனில் தீவிரமாகப் பங்களிக்கின்றன. இதன் மூலம், பழங்குடியினரை மையமாகக் கொண்ட ஒட்டுமொத்த செலவினம் ஐந்து மடங்கு அதிகரித்து, 2014-ல் பதிவான ரூ.24,000 கோடியிலிருந்து 2024–25 இல் ரூ.1.25 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. பழங்குடி விவகாரங்கள் அமைச்சகத்தின் பட்ஜெட் மட்டுமே மூன்று மடங்கு உயர்ந்து ரூ.13,000 கோடியாக உள்ளது. உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய அரசின் தீவிர உறுதிபாட்டை இது பிரதிபலிக்கிறது.
பிரதமரின் பழங்குடியினர் முன்மாதிரி கிராமத் திட்டம், இந்தியாவில் பழங்குடி சமூகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியது. 17 அமைச்சகங்களின் கூட்டு முயற்சியுடன் ரூ.79,156 கோடி மதிப்பிலான இந்த லட்சியமிக்க திட்டம், 2029-ம் ஆண்டுக்குள் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் 63,843 கிராமங்கள் மற்றும் 112 முன்னேற விரும்பும் மாவட்டங்களில் வீட்டு வசதி, சுகாதாரம், கல்வி மற்றும் இணைப்பு போன்றவற்றில் நிலவும் இடைவெளிகளை நீக்க இலக்கை நிர்ணயித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஒரே வருடத்தில் நான்கு லட்சம் உறுதியான வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. சுமார் 700 விடுதிகள் அமைக்கப்பட்டு வருவதுடன், சுமார் 26,500 கிராமங்களில் குடிநீர் குழாய் இணைப்புகளும், 8600 வீடுகளுக்கு மின்சார இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
அதே வேளையில் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாதிக்கப்படக்கூடிய 75 பழங்குடி பிரிவினரின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தும் பிரதமரின் ஜன்மன் திட்டம், மிகவும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் சமூகத்தினரும் விடுபட்டு விடக்கூடாது என்பதை உறுதி செய்கிறது. ரூ.24,104 கோடி பட்ஜெட்டில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் பல்வேறு துறைகளில் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 90,000 உறுதியான வீடுகள் கட்டப்பட்டிருப்பதுடன், ஏறத்தாழ 92,000 வீடுகளுக்கு மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு முன்னோடித் திட்டங்களும் வளர்ச்சியடைந்த பாரதத்தின் கனவை அடிமட்ட அளவில் நனவாக்கும் முயற்சியில் முக்கிய அங்கம் வகிக்கின்றன.
சீர்மரபு பிரிவினர், நாடோடி சமூகங்கள், பகுதி நாடோடி சமூகங்களை முன்னேற்றுவதற்காக 2019-ல் சீட் திட்டம் தொடங்கப்பட்டது. அதேபோல, 2025-ம் ஆண்டுக்குள், இந்தியாவில் 479 ஏகலைவ மாதிரி உறைவிடப் பள்ளிகள் மூலம் 1.38 லட்சம் மாணவர்கள் பயனடைகிறார்கள்.

