குழந்தைகள்,சமூகஆர்வலர்1000மரக்கன்றுகள்நட்டனர்

Loading

நீலகிரி
நீலகிரி குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் கண்டோண்மென்ட் வாரியத்தில்  7 வார்டுகள் உள்ளன. இதில் வார்டுகளில் தினந்தோறும் கண்டோண்மென்ட் தூய்மை பணியாளர்கள் வீடு ,வீடாக சென்று குப்பைகளை சேகரித்து  , காமராஜபுரம் பகுதியில் உள்ள கண்டோண்மென்ட்  குப்பை கிடங்கில் சேகரித்து அதனை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து அதனை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர்.
இதன் மூலம் பிளாஸ்டிக் இல்லாத  கண்டோண்மென்ட் பகுதியாகவும் , தூய்மை கண்டோண்மென்ட் பகுதியாகவும்  செயல்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக மியோவாக் என்ற விஞ்ஞானியின் பெயரில் இயற்கை உரம் மூலமாக மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டது.
அதன்படி  கண்டோன்மெண்ட்  பள்ளி குழந்தைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து சுமார் 1000 மரக்கன்றுகள் நடவு செய்தனர். மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு மியோவாக் யார் என்ற அர்த்தத்தை தெரிவித்தனர். இந்த மியோவாக் என்பவர் ஒரு விஞ்ஞானி என்றும் மரங்களின் பயன்பாடுகளை குறித்தும் விளக்கப்பட்டது.  நிகழ்ச்சியில் கோதுமை ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி சிவசாமி, வெலிங்டன் கண்டோன்மென்ட் சுகாதார அலுவலர் ராதா கிருஷ்ணன் மற்றும் ஆய்வாளர் பழனிச்சாமி, முன்னாள் துணை தலைவர் வினோத் குமார்,நியமன உறுப்பினர் ஷீபா,உறுப்பினர் செபாஸ்டின் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கண்டோன்மெண்ட் அலுவலக ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கலந்து கொண்டனர்.இந்த நிகழ்வில் முன்னாள் துணை தலைவர் வினோத் குமார் மரங்களின் அவசியத்தை பற்றி பாட்டாக பாடி பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வை  ஏற்படுத்தினார்
0Shares