ஜவுளித்துறை நிறுவனங்கள், ஏற்றுமதி கவுன்சில்கள்
![]()
பத்திரிகை தகவல் அலுவலகம்
இந்திய அரசு
சென்னை
ஜவுளித்துறை நிறுவனங்கள், ஏற்றுமதி கவுன்சில்கள் மற்றும் ஆராய்ச்சி சங்கங்களின் செயல்பாடுகளை மத்தியச் செயலாளர் ஆய்வு செய்தார்
புதுதில்லி,
மத்திய ஜவுளித் துறைச் செயலாளரும், ஜவுளிக் குழுவின் தலைவருமான திருமதி நீலம் ஷமி ராவ், மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பல்வேறு அமைப்புகளின் செயல்பாடுகள், நிறுவனங்களின் செயல்திறன் மற்றும் கொள்கை அமலாக்கத்தின் முன்னேற்றம் ஆகியவற்றை ஆய்வு செய்ய, இன்று (13.11.2025)அன்று மும்பையில் தனது இரண்டு நாள் விரிவான பயணத்தைத் தொடங்கினார்.
பயணத்தின் முதல் நாளில், அவர் கைத்தறி மற்றும் அது சார்ந்த துறைகளின் செயல்பாடுகளை கைத்தறி மேம்பாட்டு ஆணையர் டாக்டர் எம் பீனாவுடன் இணைந்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, ஜவுளித் துறைச் செயலாளர் மகாராஷ்டிரா ஜவுளித்துறை அரசின் முதன்மைச் செயலாளர் அன்ஷு சின்ஹா மற்றும் மகாராஷ்டிரா அரசின் பிற மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இதைத் தொடர்ந்து, சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையிலும், ஜவுளி அமைச்சகத்தின் இலக்குகளை அடைய தொழில்துறைக்கு ஆதரவளிக்கும் வகையிலும், ஜவுளிக் குழுமத்தின் செயல்பாடுகளை மறுசீரமைக்குமாறு அறிவுறுத்தினார்.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஆராய்ச்சியில் தொழில்துறையின் வளர்ந்து வரும் தேவைகளை அவர் வலியுறுத்தினார். இவற்றில் ஜவுளிக் குழுவின் செயல்பாடுகளை ஈடுபடுத்துமாறு அறிவுறுத்திய அவர், தொழில்துறை மற்றும் அரசின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய முன்னுரிமைகளை மறுசீரமைக்குமாறும் அறிவுறுத்தினார்.

