புற்றுநோய் சிகிச்சைக்கான ஹை-பெக் சிறப்பு கிளினிக்
![]()

ஹை-பெக் என்பது கருப்பை புற்றுநோய், குடல் கட்டிகள், பெருங்குடல் புற்றுநோய்கள், இரப்பை புற்றுநோய்கள் மற்றும் வீரியம் மிக்க கட்டிகள் போன்ற வயிற்று பகுதியில் ஆழமாக பரவியுள்ள புற்றுநோய்களை கொண்ட நோயாளிகளுக்கு வழங்க படும் மிகவும் சிறப்பு வாய்ந்த சிகிச்சை முறை என கூறினார். கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையில் வயிற்றுக்குள் கீமோதெரபி செய்யப்படுகின்றது இந்த சிகிச்சை முறையில் நுண்ணிய புற்றுநோய் செல்கள் நேரடியாக அளிக்க படுகின்றது. மேலும் மருந்து ஊடுருவல் மற்றும் அதன் செயல்திறனை மேம்படுத்துவதுடன் வழக்கமான கீமோதெரபியுடன் தொடர்புடைய பக்க விளைவுகளை குறைக்கின்றது என்று தெரிவித்தார். இது வயிற்று புற்றுநோயால் பாதிக்கபட்ட நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ உதவிகளை வழங்குகின்றது என்றார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது புற்றுநோயியல் துறைத்தலைவர் டாக்டர் சிவநேசன், உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

