கங்கை அமரன்பாராட்டு சிறப்பு பாடல் நிகழ்ச்சி
![]()
கோவை
கோவை இசை அமுதம் ஆர்கெஸ்ட்ரா சார்பில் வாழ்நாள்
சாதனையாளர் விருது பெற்ற இசையமைப்பாளர் கங்கை அமரன்
பாராட்டு தெரிவித்து சிறப்பு பாடல் நிகழ்ச்சி
கோவை இசை அமுதம் ஆர்கெஸ்ட்ரா சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக கோவை துடியலூரில் சிறப்பு பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பின்னனி பாடகர்கள் பலர் பங்கேற்று கங்கை அமரன் இசையமைத்த சினிமா பாடல்களை பாடி வாழ்த்து தெரிவித்து இசை நிகழ்ச்சி நடத்தினர்.
பிரபல இசையமைப்பாளரும் இசைஞானி இளையராஜாவின் சகோதரருமான இசையமைப்பாளர் கங்கை அமரன் 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 100 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியும், எழுதியும் உள்ளார்.
இவரை பாராட்டும் விதமாக கோவை இசை அமுதம் ஆர்கெஸ்ட்ரா சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டிருந்தது. விருது பெற்ற இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக கோவை துடியலூரில் சிறப்பு பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கங்கை அமரன் இசையமைத்த சினிமா பாடல்களை பாடினர்.
பெண்கள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவனர் வி ஆர் முருகேசன் முன்னிலையில் நடைபெற்ற பாராட்டு விழா மற்றும் இன்னிசை நிகழ்ச்சியில் இசை அமுதம் நிர்வாக இயக்குனர் வெற்றிவேல், நிஷா, கங்கை கரை தோட்டம் சிவக்குமார், ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தும், பாடல்கள் பாடியும் பாராட்டு தெரிவித்தனர். இறுதியாக சோம்ராஜ் நன்றி கூறினார்.

