புதுச்சேரி மணவெளி தொகுதியில் சிமெண்ட் சாலை
![]()
புதுச்சேரி நவ-13
புதுச்சேரி மணவெளி தொகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்
புதுச்சேரி மணவெளி சட்டமன்றத் தொகுதி நோணாங்குப்பம் புதுகாலனி பகுதியில் ரூ.32.70 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைகள் மற்றும் வடிகால் வாய்க்கால் அமைப்பதற்கான பணிகளை புதுவை சட்டப்பேரவைத் தலைவர் திரு செல்வம் ஆர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்
நோணாங்குப்பம் புது காலனி பகுதியில் கழிவு நீர் செல்ல சரியான வடிகால் வசதி இல்லாமல் கழிவுநீர் வெளியேற முடியாமல் இருந்து வந்தது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான திரு செல்வம் ஆர் அவர்களிடம் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் சட்டப்பேரவை தலைவர் அவர்கள் புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு வரைநிலைக் கழகத்தின் மூலம் ரூ32.70 லட்சம் மதிப்பீட்டில் அப்பகுதியில் உள்ள சிமெண்ட் சாலைகளை மேம்படுத்தி புதிய வடிகால் வாய்க்கால் அமைக்க அரசாணை பெற்று தந்தார்.
அதன்படி இப்பணிகளை இன்று நோணாங்குப்பம் புது காலணி பகுதியில் நடைபெற்ற பூமி பூஜையில் சட்டப்பேரவை தலைவர் திரு செல்வம் ஆர் அவர்கள் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் திருமதி விக்டோரியா இளநிலை பொறியாளர் திரு ஜெயமுகுந்தன் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

