வாக்காளர்படிவம்வழங்கும் பணியினைஆட்சியர்ஆய்வு

Loading

 

ஈரோடு

ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர்

திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள்

100 – மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

—–

ஈரோடு மாவட்டம், 100 – மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களுக்கு சிறப்பு தீவிர திருத்தம் குறித்த கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு வரும் பணியினை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள்  (11.11.2025) அன்றுநேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்,

ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 கடந்த 04.11.2025 தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 100 – மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, 46 புதூர் பகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் 2026-க்கான தொடர்பான கணக்கீட்டு படிவம் வழங்கி வரும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக, ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஈரோடு மாநகராட்சி அலுவலக கூட்டரங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவி வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வின்போது ஈரோடு மாநகராட்சி ஆணையாளர்   திரு.அர்பித் ஜெயின் இ.ஆ.ப., உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ஈரோடு மாவட்டம்.

0Shares