தூய்மை பணியாளர்கள் உறுப்பினர்களுடன் கூட்டம்
![]()
திருவள்ளூர் நவ 09 :
திருவள்ளூரில் தாட்கோ சார்பில் ஆவடி மாநகராட்சி தற்காலிக தூய்மை பணியாளர்கள் சங்கம் உறுப்பினர்களுடன் ஆய்வுக் கூட்டம்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தாட்கோ சார்பில் ஆவடி மாநகராட்சி தற்காலிக தூய்மை பணியாளர்கள் சங்கம் உறுப்பினர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.
தூய்மை பணியாளர்களுக்கு தொழில் முனைவு மேம்பாடு மற்றும் திறன் பயிற்சி வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். கூட்டத்தில், திருவள்ளூர் மாவட்ட தாட்கோ மேலாளர் ர.சரண்யா, தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர்கள் நல வாரிய மாநில உறுப்பினர் தி. அரிஷ் குமார், ஆவடி மாநகராட்சி அலுவலர் குமார், ஆவடி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

