தூய்மைபணியாளர்களின் குறைகளை கேட்டு தீர்வு

Loading

திருவள்ளூர் நவ 09 :
திருவள்ளூரில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் திங்கட்கிழமை தூய்மை பணியாளர்களுக்கு குறை தீர்க்கும் நாள் கூட்டம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் மாவட்டத்தில், தூய்மை பணியாளர்களுக்கு குறை தீர்க்கும் நாள் கூட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இனி வருகின்ற ஒவ்வொரு மாதமும் மூன்றாம் திங்கட்கிழமை அன்று 12 மணி முதல் 1 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் குறைதீர் நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தூய்மை பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து அதன் மீது தீர்வுக்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் இக்கூட்டத்தில் ஆவடி ஆணையர், திட்ட இயக்குநர், இணை இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நகராட்சி ஆணையர்கள், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்), பேரூராட்சிகளின் உதவி இயக்குனர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் தூய்மை பணியாளர்கள் இந்த குறைகேட்பு கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளவும் மேலும் அவர்கள் கட்டுபாட்டின் கீழ் பணிப்புரியும் தூய்மை பணியாளர்களை தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
0Shares