பிரம்மா குமாரிகள் சமாஜ் சங்கம் மாற்றத்தை நோக்கி
![]()
கோவை
யுனைடெட் கல்வி குழுமம் தமிழ்நாடு பிரம்மா குமாரிகள் சமாஜ் சங்கம்
நல்மாற்றத்தை நோக்கி இளைஞர்கள் – 3 நாள் இளைஞர் திருவிழா
கல்லூரியில் யோகா மையம் அமைக்க அடிக்கல் நாட்டினர்

கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கல்வி நிறுவனங்களும் பிரம்மா குமாரிகள் சங்கமும் இணைந்து நல்மாற்றத்தை நோக்கி இளைஞர்கள் என்ற தலைப்பில், இளைஞர் திருவிழா மூன்று நாட்கள் யுனைடெட் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. நிறைவு நாளில் இளைஞர்கள் விழா சார்ந்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கல்வி குழுமமும் தமிழ்நாடு பிரம்மா குமாரிகள் சமாஜ் சங்கமும் இணைந்து நல்மாற்றத்தை நோக்கி இளைஞர்கள் என்ற தலைப்பில், இளைஞர்களின் மனநலனை மேம்படுத்தும் இளைஞர்கள் திருவிழா யுனைடெட் கல்வி நிறுவனத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது.
இவ்விழாவில் மனவலிமையை ஏற்படுத்தக்கூடிய தியானம் குறித்து அறிந்து தியானப் பயிற்சியினை மேற்க்கொண்டனர். மேலும் மைதானத்தில் வாழ்வியலை மேம்படுத்தும் உயர் தத்துவங்கள் மற்றும் பண்பாடு குறித்த பல்வேறு கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் மாணவ மாணவிகள் கைகளில் வண்ணங்களை கொண்டு தங்கள் கை அச்சுக்களை பதிவு செய்தனர். மேலும் பல்வேறு புதிர் விளையாட்டுக்கள், மன நல விளையாட்டுக்கள், சிக்கல்களுக்கு தீர்வு, செல்பி பூத் உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தியிருந்தனர். இதனை மாணவர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
இவ்விழாவின் நிறைவு விழாவானது கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. யுனைடெட் கல்வி நிறுவனத்திற்குட்பட்ட ஆறு கல்லூரிகளின் மாணவ மாணவியரின் பாரத நாட்டின் பாரம்பரிய நடனத்தோடு நிறைவு விழா துவங்கியது. ஒளிமிக்க எதிர்காலம் என்ற தலைப்பில் திருவண்ணாமலை பிரம்மா குமாரிகள் சங்கத்தின் இயக்குநர் பிரம்மா குமாரி உமா துவக்கவுரை ஆற்றினார்.
ஒரு நிமிட பிரார்த்தனையுடன் விழா துவங்கியது. யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் பொறியாளர் சண்முகம் வரவேற்புரை வழங்கினார். பிரம்மா குமாரிகள் சங்கத்தின் இளைஞர்கள் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பிரம்மா குமாரிகள் சங்கம் குறித்து அறிமுகம் செய்து மூன்று நாட்கள் நிகழ்வுகள் குறித்தும் அறிக்கையினை வாசித்தார்.
சிறப்பு விருந்தினர் குறித்து கோவை மாவட்டத்தின் பிரம்மா குமாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரம்மா குமாரி ராஜேஸ்வரி அறிமுகம் செய்தார். பிரம்மா குமாரிகள் சங்கத்தின் இளைஞர்கள் பிரிவின் தலைவர் ராஜ யோகினி பிரம்மா குமாரி சந்திரிகா தீதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும்போது மாணவர்கள் தங்கள் எண்ணங்களை மேம்படுத்திக் கொண்டு மன நலனை மேம்படுத்தி சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு தியானம் உள்ளிட்ட பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று எடுத்துக் கூறினார். மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பிரம்மா குமாரிகள் சங்கத்தின் தமிழ்நாட்டின் சேவை பிரிவின் தலைவர் ஒருங்கிணைப்பாளர் பிரம்மா குமாரி பீனா ஊக்கஉரை வழங்கினார்.
தொடர்ந்து யுனைடெட் கல்வி குழும கல்லூரிகளில் தலைவர்கள் மற்றும் இவ்விழாவிற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் கல்லூரி சார்பிலும், பிரம்மா குமாரிகள் சங்கம் சார்பிலும் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
முன்னதாக யுனைடெட் கல்லூரி வளாகத்தில் யோகா பயிற்சிகள் மேற்கொள்ள புதிதாக யோகா மையம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற இளைஞர்கள் விழா சார்ந்து நடைபெற்ற ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி, ரங்கோலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிறைவாக ராஜயோக ஆசிரியர் பிரம்ம குமாரி பவித்ரா நன்றியுரை வழங்கினார். விழாவில் யுனைடெட் கல்வி நிறுவனத்திற்கு உட்பட்ட கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள், பிரம்ம குமாரி சங்கத்தின் சேவையாளர்கள் உட்பட மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

