நண்பனை கொலை செய்த வழக்கில் மூன்று பேர் கைது
![]()
திருவள்ளூர் நவ 08 :
திருவள்ளூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனை கல்லைப் போட்டு கொலை செய்த வழக்கில் மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைப்பு :
திருவள்ளூர் அடுத்த எம்ஜிஆர் நகர் ஏரிக்கரை ஓரத்தில் இளைஞர் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள் மணவாளநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து விரைந்து வந்த மணவாளநகர் இன்ஸ்பெக்டர் ஃபாருக் தலைமையிலான போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது மணவாளநகர் கபிலர் நகர் பகுதியைச் சேர்ந்த நவீன் (எ) குள்ள சீனு (24) என்பது தெரியவந்தது. சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவன் மீது கஞ்சா விற்பனை, கொலை வழக்கு போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததும் தெரியவந்தது. ஏற்கனவே நவீன்(எ) குள்ள சீனு மீது பல்வேறு வழக்கில் தொடர்பு இருப்பதால் இந்த கொலையில் ஈடுபட்டது யார் என்பது குறத்து மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையைத் தொடர்ந்து மணவாளநகர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த பிரவீன் (எ) குள்ள பிரவீன்(21), விக்கி (எ)விக்னேஷ் , கரி ஆகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், நவீன் (எ) குள்ள சீனு, பிரவீன் (எ) குள்ள பிரவீன்(21),, விக்கி (எ)விக்னேஷ் , கரி ஆகாஷ் உட்பட ஆறு பேர் நேற்று முன் தினம் இரவு ஒன்றாக மது அருந்துவதற்காக சென்றுள்ளனர்.
அப்போது நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது நவீன் (எ) குள்ள சீனு குடிபோதையில் பிரவீன் (எ) குள்ள பிரவீனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.இதனால் பிரவீன் (எ)குள்ள பிரவீன் ஆத்திரத்தில் அங்கிருந்த பராங்கல்லை எடுத்து மூன்று முறை தலையில் போட்டு கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் குவாட்டர் பாட்டிலாலும் தலையில் ஓங்கி அடித்ததும் விசாரணையில் தெரியவந்தது.இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

