பிரதமரின் வீடு கட்டும் திட்டம் 2024ம் நிலுவை தொகை

Loading

சேலம்
சேலத்தில் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் 2024ம் ஆண்டின் மூலம் மானியத் தொகை பெற பணி ஆணை பெற்று வீடு கட்டிக் கொண்டிருக்கும் சிலருக்கு கடந்த 10 மாதங்களாக மானியத் தொகை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளனர். இதனால் வீடு கட்டிக் கொண்டிருக்கும் பயனாளிகள் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே நிலுவையில் உள்ள மானியத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்.
தற்போது வந்துள்ள பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் 2.5 இலட்சம் ரூபாய் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.மேலும் கட்டுமானம் சம்பந்தப்பட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், மானியத் தொகையை ரூபாய் 5 இலட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
வீடு கட்டுவதற்கு அதிகாரிகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யுங்கள், உங்கள் இடத்தை நாங்கள் நேரில் வந்து பார்க்கிறோம் என்று கூறுகிறார்கள். நாங்கள் ஆன்லைனில் பதிவு செய்த பின்பு 40 நாட்கள் ஆனாலும், எங்கள் இடத்தை பார்வையிட அதிகாரிகள் வருவதில்லை. நாங்கள் போன் மூலம் தொடர்பு கொண்டால் இன்று வருகிறோம், நாளை வருகிறோம் என்று கூறுகிறார்கள். எனவே, நாங்கள் விடுமுறை எடுத்து வீட்டில் இருப்பதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆகையால் இனி வரும் காலங்களில் பதிவு செய்தால் விரைந்து பார் உத்தரவிடுங்கள். பார்வையிட
தற்போது இதுவரை பதிவு செய்து, முடிந்த பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு பணி ஆணை விரைந்து வழங்கிட வேண்டும்.
மானியம் பெற்று வீடு கட்ட இருக்கும் ஒரு சில பயனாளிகள் விருப்பத்திற்கு ஏற்ப 300 சதுர அடியில் இருந்து 800 சதுர அடி வரை வீடு கட்ட அனுமதி வழங்கிட வேண்டும்.
தற்போது பணியில் உள்ள அதிகாரிகள் அடித்தளம் (பேஸ்மென்ட்) போட்டுள்ள பயனாளிகளுக்கும் மானியம் வழங்கப்படும் என்றனர். பின் அவர்களே அடித்தளம் போடப்பட்டிருந்தால் மானியம் வழங்கப்படாது என்கின்றனர். அதிகாரிகளின் பேச்சை நம்பி அடித்தளம் போட்டுள்ள பயனாளிகள் மிகுந்த மன உளைச்சளில் உள்ளனர். எனவே, அடித்தளம் போட்டுள்ள பயனாளிகளுக்கும் பணி ஆணை வழங்கி வீடு கட்ட அனுமதி வழங்க வேண்டும்.
எனவே, உயர்திரு. மாவட்ட ஆட்சியராகிய தாங்கள் எங்களது மனுவின் மீது தக்க விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகின்றோம். மேற்படி தாங்கள் காலதாமதபடுத்தினால் மீண்டும் தங்கள் அலுவலகத்தின் முன் பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டி தொடர் போராட்டம் நடத்தப்படும் என்பதை தங்களின் கனிவான கவனத்திற்கு, தெரிவித்துக்கொள்கிறோம்.
0Shares