வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சாலை மறியல்

Loading

திருவள்ளூர் நவ 08 :
திருவள்ளூர் நகராட்சி பகுதியில் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட வழக்கறிஞரை தரக்குறைவாக பேசி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சாலை மறியல் :

திருவள்ளூர் நகராட்சியில் உள்ள முகமது அலி தெருவைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் கல்யாணசுந்தரம்(44). இவருக்கு சொந்தமான இடம் ஜெயாநகர் பகுதியில் உள்ளது. அந்த இடத்தில் கடந்த 31 ஆம் தேதி 4 பேர் அமர்ந்து மது அருந்தி சத்தம் போட்டு ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததார்களாம். இது தொடர்பாக தகவலறிந்த நிலையில் அங்கு சென்று அவர்களை தட்டிக் கேட்டாராம்.

இதில் ஆத்திரமடைந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் வழக்குரைஞரை தகாதவாறு பேசி கை மற்றும் கல்லால் தாக்கி அவரின் காரின் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தியதோடு, ஏதாவது பேசினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டினார்களாம். இதில் காயமடைந்த கல்யாணசுந்தரம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதுகுறித்து கல்யாணசுந்தரம் கொடுத்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த திருவள்ளூர் நகர் காவல் நிலைய போலீசார் கல்யாணசுந்தரத்தை தாக்கிய தாக்கிய ஜானி (24), சரவணன் (23), குமரேசன் (24), பிரவீன்(23) ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் ஜானியின் தாயார் ஷோபா கொடுத்த புகாரின்பேரில் வழக்குரைஞர் கல்யாணசுந்தரம் மற்றும் கிஷோர்(22) ஆகிய இருவர் மீதும் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் காவல் நிலை ஆய்வாளரை கண்டித்து வழக்குரைஞர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதை அடுத்து கலைந்து சென்றனர்.
0Shares