கொங்குநாடார்அறக்கட்டளைஸ்ரீ மாரியம்மன் திருவிழா
![]()
சேலம்
கொங்கு நாடார் குல சமூக அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருவிழா
சேலம் மாவட்டம் எருமாபாளையம் கொங்கு நாடார் குல சமூக அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருவிழா, விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 4-தேதி செவ்வாய்க்கிழமை, ஸ்ரீ எல்லை பிடாரம்மன் சுவாமி அழைத்து வருதல் இரவு பூச்சாற்றுதல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஐப்பசி 11ஆம் தேதி இரவு 7 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் மற்றும் கம்பம் நடுதல் கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று, ஞாயிற்றுக்கிழமை ஐப்பசி 16ஆம் தேதி விடியற்காலை கும்பம் தாளித்தல் ,சாட்டை போடுதல், பால்குடம் எடுத்து வருதல், ஐப்பசி 18 ஆம் தேதி காலை சக்தி அழைத்து வருதல், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லாக்கில் சுவாமி திருவீதி உலா வந்து பொதுமக்கள் தரிசனம் செய்தனர். புதன்கிழமை ஐப்பசி 19 ஆம் தேதி ஊஞ்சல் உற்சவம், பொங்கல் வைத்தல், கிடா தீர்த்தம் போடுதல், அழகு குத்துதல், நாக்கு அழகு குத்துதல், பூங்கரகம் மற்றும் அக்னி கரகம் எடுத்தல், வியாழக்கிழமை மாலை பூ மாலை ஆட்டமும் அதனைத் தொடர்ந்து வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை ஐப்பசி 21 ஆம் தேதி சுவாமி மஞ்சள் நீர் உற்சவத்துடன் திருவிதி உலா வருதல் கம்பம் எடுத்து கிணற்றில் விடுதல் நிகழ்ச்சி நடைபெற்று, செவ்வாய்க்கிழமை ஐப்பசி 25-ஆம் தேதி சுவாமிக்கு மறுபடியும் பூஜை செய்து பொதுமக்கள் தரிசனம் செய்தனர். இவ்விழாவில் எருமாபாளையம் கொங்கு நாடார் குல சமூக அறக்கட்டளை நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் தலைவர் ராஜா (எ) பெருமாள், செயலாளர் மாது, பொருளாளர் ராஜேந்திரன், தர்மகரத்தா பழனி இணை தர்மகர்த்தா பாஸ்கர், துணைத்தலைவர்கள் சின்னத்தம்பி (எ)செங்கோடன்,வாசுதேவன், கனகராஜன், ராமச்சந்திரன்,மாதேஸ்வரராஜன், கனகராஜன், கருமலை,அறக்கட்டளை ஆலோசகர் கோபாலகிருஷ்ணன், கோவில் ஆலோசகர் காளியப்பன், செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ், கிருஷ்ணன், தமிழழகன், கிருஷ்ணன், தங்கராஜ்,கிருஷ்ணமூர்த்தி, பூபதி, சங்கர்,அறிவழகன், ஆறுமுகம், சுப்பிரமணி, மாது,ஜெய்சங்கர், செங்கோடன், துரைசாமி,லட்சுமணன், தமிழழகன், சோமசுந்தரம்,சௌந்தரராஜன், மோகன்ராஜ், வேலாயுதம்,பாலகிருஷ்ணன், கோபி, அருணாசலம்,எலங்காளி, மணி,மற்றும் விழா கமிட்டியர் பொதுக்குழு உறுப்பினர்கள் எருமாபாளையம் கோயில் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் பின்பு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது,

