யுனைடெட் கல்வி குழுமம் தமிழ்நாடு பிரம்மகுமாரிகள்
![]()
கோவை
யுனைடெட் கல்வி குழுமம் தமிழ்நாடு பிரம்மகுமாரிகள் சமாஜ் சங்கம்
இணைந்து யூத் ஃபார் சேன்ஜ் என்ற இளைஞர்கள் திருவிழா
கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கல்வி குழுமமும் தமிழ்நாடு பிரம்மகுமாரிகள் சமாஜ் சங்கமும் இணைந்து யூத் ஃபார் சேன்ஜ் என்ற தலைப்பில் இளைஞர்களின் மனநலனை மேம்படுத்தும் இளைஞர்கள் திருவிழா யுனைடெட் கல்வி நிறுவத்தில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இந்நிகழ்வின் துவக்கவிழா கல்லூரியின் சரஸ்வதி கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது. ஒரு நிமிட மௌன பிரார்த்தனையுடன் துவங்கிய இத்துவக்க விழாவில் பிரம்மகுமாரிகள் சங்கத்தின் மூத்த இராஜயோகினி இராஜேஸ்வரி, யுனைடெட் கல்வி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் பொறியாளர் சண்முகம் ஆகியோர் தலைமையேற்று தலைமையுரையும், ஆசியுரையும் வழங்கினார்கள்.
பெரியநாயக்கன்பாளையம் பிரம்மகுமாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரம்மகுமாரி கவுதமி வரவேற்புரை வழங்கினார். பிரம்ம குமாரிகள் ஈஸ்வர வித்யாலயம் குறித்த அறிமுகத்தை பிரம்ம குமார் மதன், மூன்று நாட்கள் நிகழ்வுகள் குறித்த அறிமுகத்தை தமிழ்நாடு யூத் விங்கின் ஒருங்கிணைப்பாளர் பிரம்ம குமாரி கவிதா ஆகியோர் வழங்கினர்.
யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் முனைவர் சிவக்குமார் துவக்க விழா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் யுனைடெட் கல்வி குழுமத்திற்குட்பட்ட அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களும், பேராசிரியர்களும் துறைத்தலைவர்களும் மாணவ மாணவியரும் கலந்து கொண்டனர்.
துவக்க விழாவினை தொடர்ந்து மனவலிமையை ஏற்படுத்தக்கூடிய தியானம் குறித்து அறிந்து தியானப் பயிற்சியினை மேற் கொண்டனர். வாழ்வியலை மேம்படுத்தும் உயர் தத்துவங்கள் மற்றும் பண்பாடு குறித்த கண்காட்சியினை மாணவர்கள் கண்டனர். இந்நிகழ்வானது 3 நாட்கள் நடைபெறவுள்ளது.

