பாமகவினருக்கு பாதுகாப்பு வழங்க எஸ்பியிடம் புகார்
![]()
திருவள்ளூர் நவ 07 :
பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக எம் எல் ஏ வை தாக்குதல் நடத்தியதால் பாமகவினருக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி முன்னாள் பாமக எம்எல்ஏ எஸ்பியிடம் புகார் :
பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளை தாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புமணி ஆதரவாளர்கள் தாக்குதல் நடந்த வாய்க்கு வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு வழங்கிய வேண்டும் என்றும் பாமக முன்னாள் எம்எல்ஏ., கோ. ரவிராஜ் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார்.அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனராகவும், தலைவராகவும் டாக்டர் ச. இராமதாஸ் செயல்பட்டு வருகிறார்.
கடந்த 36 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவருக்கு எதிராக ஒரு குழு செயல்பட்டு கொண்டு பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான சிந்தனைகளுடன் செயல்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இரா.அருள் கட்சி நிர்வாகி இல்ல இறப்பு செய்தி கேட்டு அஞ்சலி செலுத்த சென்றுள்ளார்.
அப்போது ஏத்தாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்தூர் தழை பாலம் அருகே ஆத்தூரை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் தலைமையில் ஒரு கும்பல் சட்டமன்ற உறுப்பினர் இரா.அருளின் காரையும் அவருடன் பயணித்தவர்கள் காரையும் காவலர்கள் முன்பே தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் உடன் பயணித்த பல நிர்வாகிகளுக்கு காயங்கள் ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சட்டமன்
டாக்டர் ராமதாசுக்கு எதிராகவும், எங்களுக்கு எதிராகவும் செயல்படுகின்ற அன்புமணி தலைமையிலான குழுவினரிடமிருந்து பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த அனைத்து தொண்டர்களை பற்றியும் சமூக ஊடங்களில் தொடர்ந்து அவதூறுகளை கிளப்பி வரும் இது போன்ற குழுவினர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதி பூங்காவாக இருக்கின்ற தமிழகத்தை ஒரு கலவர பூமியாக மாற்றுவதற்கான திட்டத்தை அந்த குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். ஆகவே பாட்டாளி மக்கள் கட்சிக்கும் அதன் பொறுப்பாளர்களுக்கும் எதிராக செயல்படுகின்ற அந்தக் குழுவினர் மீதும் , பாமகவின் இணை பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான இரா. அருள் மீது நடத்தப்பட்ட சம்பவத்திற்கு காரணமானவர்களை தமிழக காவல்துறை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும்.அவருக்கு உடந்தையாக இருந்த நடர்கள் ஆதரவாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

