ஸ்ரீ வாசீஸ்வரசுவாமி திருக்கோயிலில் அன்னாபிஷேகம்
![]()
திருவள்ளூர் நவ 07 :
திருவள்ளூர் அடுத்த திருப்பாசூரில் உள்ள அருள்மிகு தங்காதலி அம்மன் உடனுறை ஸ்ரீ வாசீஸ்வரசுவாமி திருக்கோயி லில் அன்னாபிஷேகம் :
உலக உயிர்கள் அனைத்திற்கும் உணவு அளித்து பசியை போக்குபவர் என்பவதால் சிவ பெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பெளர்ணமி அன்று சிவ பெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். ஒரு அன்னாபிஷேக தரிசனம் கண்டால் ஒரே சமயத்தில் கோடி லிங்கங்களை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி ஒன்றியம் திருப்பாசூரில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இயங்கும் அருள்மிகு தங்காதலி அம்மன் உடனுறை ஸ்ரீ வாசீஸ்வரசுவாமி திருக்கோயி ல் ஈசனின் பேச்சை கேட்காமல் தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொள்ள சென்றதால், சிவபெருமானின் சாபத்தால் பூலோகத்தில் பார்வதியாக பிறந்து பூஜை செய்த தலம் என்பது வரலாறு..
இச்சிறப்பு மிக்க கோவிலில் அன்னாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.இதில் அருள்மிகு வாசீஸ்வரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.அப்பொழுது அன்னாபிஷே க தரிசனத்தை காண வந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் நமச்சிவாயா,நமச்சிவாயா என கோஷமிட்டு சிவபெருமானின் அருளை பெற்றனர்.

