மாணவி கூட்டு பாலியல் சம்பவம் பெரும்அதிர்ச்சி
![]()
கோவை
கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்ய பட்ட சம்பவத்தில் சரியான நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு. பழனிசாமி பேட்டி..
கடந்த இரு தினங்களுக்கு முன்னர், கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய பட்ட சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவத்தில் மூன்று குற்றவாளிவாளிகளை காவல்துறையினர் சுட்டு பிடித்தனர் அது சம்பந்தமாக கோவை பந்தயசாலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு. பழனிசாமி கூறியதாவது..
கோவை மாவட்டம் விமான நிலையம் அருகே சுமார் 40 ஏக்கருக்கும் மேலான பகுதிகள் பெரும் காடுகளாக உள்ளது. இந்த பகுதியில் பகல் வேளையில் கூட ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத நிலை உள்ளது. இந்த பகுதிக்கு காதல் என்று கூறி இளம்பெண்ணும், இளைஞரும் இரவு நேரத்தில் சென்றது கடும் கண்டத்த்திற்கூறியது. குற்றம் செய்த குற்றவாளியை விட குற்றம் செய்ய தூண்டும் வகையில் இவர்கள் நடந்து கொண்டது சற்று சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாலியல் பலாத்காரம் செய்யபட்ட நிலையில் இளம் பெண்ணும், தலையில் வெட்டு காயத்துடன் இளைஞரும் இந்த பகுதியில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததும் துரிதமாக செயல்பட்டு இருவரையும் மீட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படா வண்ணம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட மூன்று குற்றவாளிகளையும் 24 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து அவர்களை சுட்டு பிடித்து காவல்துறை மான்பை காத்துள்ளனர். உடனுக்குடன் நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக கூறினார். மேலும் கோவை மாநகரில் குற்ற சம்பவங்கள் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து அதிக அளவில் ரோந்து பணி மேற்கொண்டு முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

