திட்டப்பணிகளைஆட்சித்தலைவர்ரஞ்ஜீத் சிங்,ஆய்வு

Loading

தேனி மாவட்டம்

உத்தமபாளையம் பேரூராட்சி மற்றும் சின்னமனூர் நகராட்சிப்  பகுதிகளில்  ரூ.34.61  கோடி  மதிப்பீட்டில் நடைபெற்று  வரும்  வளர்ச்சித்  திட்டப்பணிகளை  மாவட்ட  ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள்  நேரில்  பார்வையிட்டு  ஆய்வு  மேற்கொண்டார்.

 

தேனி மாவட்டம், உத்தமபாளையம்  பேரூராட்சி மற்றும் சின்னமனூர் நகராட்சிப்  பகுதிகளில்  நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட  ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங்,   இ.ஆ.ப., அவர்கள்  (05.11.2025)அன்று நேரில் பார்வையிட்டு   ஆய்வு மேற்கொண்டார்.

உத்தமபாளையம் பேரூராட்சியில், மூலதன மானிய நிதியின்   கீழ்   ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் புதிய பேரூராட்சி அலுவலக கட்டடம் கட்டுமான பணிகளையும்,                  அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.29 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, சின்னமனூர் நகராட்சி, அரசு மருத்துவமனையில்  15-ஆவது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ்  ரூ.3.50 கோடி மதிப்பீட்டில்  கூடுதல் மருத்துவமனை கட்டடம் கட்டுமான பணிகளையும்,  பொன்நகரில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில்,  பள்ளி மேம்பாட்டு மூலதன மானிய திட்டத்தின்   கீழ்            ரூ.74 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேற்குறிப்பட்ட பணிகளை அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இவ்வாய்வுகளில்  உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.வில்லியம் ஜேசுதாஸ், உத்தமபாளையம் பேரூராட்சித் தலைவர் திரு.முகமது அப்துல் காஷிம், செயல் அலுவலர் திரு.சின்னச்சாமி பாண்டியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி.

0Shares