கோவை ஓ பை தமாரா ஹோட்டலில் உணவு திருவிழா

Loading

கோவை
கோவை ஓ பை தமாரா ஹோட்டலில் ஆச்சி காரைக்குடி உணவு திருவிழா
கோவை ஓ பை தமாராவில் உள்ள ஓ கஃபேவில் செட்டிநாடு சமையலின் பாரம்பரியத்தை அனுபவிக்க, ஆச்சி சகோதரிகள் காரைக்குடியின் திடமான, தனித்துவமான சுவைகளை உங்கள் தட்டில் கொண்டு வருகின்றனர். நவம்பர் 6 முதல் 9 வரை இந்த சிறப்பு உணவு விழா நடைபெறுகிறது.
கோலா உருண்டை குழம்பு, இறால் தொக்கு, நாட்டுக்கோழி தண்ணி குழம்பு, மட்டன் சுக்கா, கவுனி அரிசி ஹல்வா போன்ற செட்டிநாடு சிறப்பு உணவுகளை ருசிக்கலாம். இதனுடன், பணியாரம், பால் கொழுக்கட்டை, தேன்குழல், சீப்பு சீடை, கந்தரப்பம் உள்ளிட்ட செட்டிநாடு பாரம்பரிய உணவுகளைக் கொண்ட லைவ் கவுண்டர்களும் இடம்பெறுகின்றன.
இந்த உணவு திருவிழாவின் பகுதியாக, உலகளாவிய சுவைகளை கொண்ட சாலட், என்ட்ரே, டெசர்ட் உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகளுடன் கூடிய மல்டி-குஸீன் பஃபெவும் வழங்கப்படுகிறது.
0Shares