கட்டுமான பணிகள் ஆட்சியர் மு.பிரதாப் நேரில் ஆய்வு
![]()
திருவள்ளூர் மாவட்டத்தில் இரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் ஆய்வு :
திருவள்ளூர் நவ 06 : திருவள்ளூர் மாவட்டத்தில் இரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகளையும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்குச்சாவடி மையத்தின் அடிப்படை வசதிகள் தொடர்பான பணிகளையும் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் இடம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 விண்ணப்பப் படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர் வழங்கினார்.
அதனை தொடர்ந்து திருவள்ளுர் வட்டம், காக்களுர் ஊராட்சி மற்றும் ஆவடி வட்டம், திருநின்றவூர் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 விண்ணப்பப் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று விநியோகிக்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, காக்களுர் அரசினர் தொடக்கப்பள்ளியிலும் பொன்னேரி வட்டம், ஊராட்சி ஒன்றிய அரசினர் நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திலும், திருநின்றவூர் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அரசினர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், திருவள்ளூர் வட்டம், செவ்வாய்பேட்டையில் நெடுஞ்சாலைகள் துறை சார்பில் ரூ.8.1 கோடி மதிப்பீட்டில் இரயில்வே மேம்பாலம் கடவு எண் 15 கட்டுமானப் பணிகளையும், வேப்பம்பட்டில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் இரயில்வே மேம்பாலம் கடவு எண் 14 கட்டுமானப் பணிகளையும், ரூ.56 கோடி மதிப்பீட்டில் இரயில்வே மேம்பாலம் கடவு எண் 13 கட்டுமானப் பணிகளையும், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், நந்தியம்பாக்கம் ஊராட்சியில் ரூ.44.5 கோடி மதிப்பீட்டில் அத்திப்பட்டு நந்தியம்பாக்கம் இடையே கட்டடப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஸ்ரீராம், உதவி வாக்குப்பதிவு அலுவலரும் திருவள்ளூர் வட்டாட்சியருமான பாலாஜி, நெடுஞ்சாலைகள் துறை உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், உதவி வாக்குப்பதிவு அலுவலரும் பொன்னேரி வட்டாட்சியருமான சோமசுந்தரம், திருநின்றவூர் நகர்மன்ற தலைவர் உஷாராணி ரவி, வாக்குப்பதிவு அலுவலரும் ஆவடி மாநகராட்சி துணை ஆணையருமான மாரிசெல்வி, உதவி வாக்குப்பதிவு அலுவலரும் உதவி வாக்குப்பதிவு திருநின்றவூர் நகராட்சி ஆணையருமான ஜீவிதா,அலுவலரும் ஆவடி வட்டாட்சியருமான கண்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

