இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்..கடைசியில் நடந்த அதிர்ச்சி!
![]()
மணலி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 23 வயது இளம்பெண் வீட்டில் குளித்துகொண்டிருந்தபோது, கதவின் ஓட்டை வழியாக வாலிபர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார்.
மணலி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் 23 வயது இளம்பெண். இவர் வீட்டில் குளித்துகொண்டிருந்தபோது, கதவின் ஓட்டை வழியாக வாலிபர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து வீட்டுக்குள் ஓடிவிட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த மோனிஷ் கவுதமை (வயது 27) கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருவொற்றியூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி நீதிபதி கார்த்திக், மோனிஷ் கவுதமிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

