ஓட்டப் போட்டி சா.மு.நாசர் துவக்கி வைத்தார்

Loading

திருவள்ளூரில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் : அமைச்சர் சா.மு.நாசர் கொடியசைத்து துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் நவ 05 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற நெடுந்தூர ஓட்டப் போட்டிகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவள்ளூர் மாவட்ட பிரிவின் சார்பாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் நடைபெற்றன. மேலும் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்கள் 8.கி.மீ துரமும் பெண்கள் 5.கி.மீ துரமும் மற்றும் 25 வயதிற்கு மேப்பட்ட ஆண்கள் 10.கி.மீ துரமும் பெண்கள் 5.கி.மீ துரமும் நடைபெற்றது. இப்போட்டிகளில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.இப்போடியில் முதல் இடத்தை பெறும் வீரர், வீராங்கனைகளுக்கும் ரூ.5000 வீதமும், இரண்டாம் இடத்தை பெறும் வீரர்,வீராங்கனைகளுக்கும்  ரூ.3000 வீதமும், மூன்றாம்  இடத்தை பெறும் வீரர்,வீராங்கனைகளுக்கும்  ரூ.2000 வீதமும், நான்காம் இடம் முதல் பத்தாம் இடம் வரை பெறும் ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளுக்கும் ரூ.1000 வீதமும் மொத்த பரிசு தொகை ரூ.68000 க்கான வங்கியில் வரவு வைக்கப்பட்டு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப்,திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் ச.சந்திரன்,மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சேதுராஜன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares