இராணிப்பேட்டை ஆட்சித்தலைவர் ஜெ.யு.சந்திரகலா

Loading

அரக்கோணம் வட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமில்  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர். ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள்
57  மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றுடன்கூடிய அடையாள
அட்டைகளை வழங்கினார்கள்.

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர். ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள்  (4.11.2025)  அன்று அரக்கோணம் வட்டம் மின்னல் ஊராட்சி,  சாலை, NLP திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில்  57 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டைகளை வழங்கினார்கள்.

முன்னதாக, முகாம் நடைபெறுவதையும், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறுவதையும் பார்வையிட்டு, மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்கள்.

இம்முகாமில் 162 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் 57 நபர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, 82 நபர்களுக்கு UDID  தேசிய அடையாள அட்டைக்கான பதிவும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், 11  மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு வேண்டி கோரிக்கை மனு அளித்தனர்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.18,000/-  வீதம் ரூ.36 ஆயிரம் மதிப்பீட்டிலான  சக்கர நாற்கலியையும், 1 மாற்றுத்திறனாளிக்கு  ரூ.4 ஆயிரம் மதிப்பீட்டிலான காதொலிக் கருவியையும்  வழங்கினார்கள்.

இம்முகாமினில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.வசந்த ராமகுமார், வட்டாட்சியர் திரு.வெங்கடேசன், ஊராட்சி மன்றத் தலைவர் திரு.கோபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு. செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், இராணிப்பேட்டை மாவட்டம்.

0Shares