ஒப்பந்த அடிப்படையில் வழக்குரைஞர்கள்…முதலமைச்சர் ரங்கசாமி பணி நியமனங்களை வழங்கினார்!

Loading

புதுச்சேரி மற்றும் காரைக்கால் வட்டாரப் பகுதியில் உள்ள பல்வேறு குற்றவியல் நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்த ஐந்து உதவி அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டதற்கான பணி ஆணைகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

புதுச்சேரி மாண்பமை துணைநிலை ஆளுநர் அவர்கள் பின்வரும் ஐந்து வழக்குரைஞர்களை உதவி அரசு குற்றவியல் வழக்குரைஞர்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதற்கு ஆணையிட்டிருந்தார்.

1. இளங்கோவன், தந்தை பெயர் புண்ணியகோடி.A.

VI- குற்றவியல் நடுவர் நீதிமன்றம் புதுச்சேரி.

2. ஜெயமாரிமுத்து, தந்தை பெயர் விஜயகுமார்.K.

மகளிர் நீதிமன்றம் புதுச்சேரி

3. ஜெரால்ட் இமானுவேல், தந்தை பெயர் மனோகரன், M.P.

V- குற்றவியல் நடுவர் நீதிமன்றம் புதுச்சேரி.

4. தேவேந்திரன் தந்தை பெயர் வேலாயுதம்.T.

VII- குற்றவியல் நடுவர் நீதிமன்றம் புதுச்சேரி.

5. இயேசு ராஜ், தந்தை பெயர் ஆபிரகாம்.A.,

I- குற்றவியல் நடுவர் நீதிமன்றம் காரைக்கால்.

மேற்சொன்ன
புதுச்சேரி மற்றும் காரைக்கால் வட்டாரப் பகுதியில் உள்ள பல்வேறு குற்றவியல் நீதிமன்றங்களில் ஐந்து உதவி அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டதற்கான பணி ஆணைகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழக்குரைஞர்களிடம் புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் அலுவலக அறையில் வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது புதுச்சேரி சட்டச் செயலர் திரு. விக்ராந்த் ராஜா, இ.ஆ.ப., மற்றும் சட்டத்துறையின் சார்புச் செயலர் திருமதி. ஜானாஸ் ரஃபி என்கிற ஜான்சி அவர்கள் உடனிருந்தனர்.

மேற்சொன்ன சட்ட அலுவலர்களின் பணியமர்த்தமானது புதுச்சேரி அரசு சட்டத்துறையின் 11. 6. 2021 தேதியிட்ட புதுச்சேரி அரசு ஆணை பல்வகை எண் 22/2021-LDஇல் அறிவிக்கை செய்யப்பட்ட 2021ஆம் ஆண்டு புதுச்சேரி சட்ட அலுவலர்கள் (பணியமர்த்தம் மற்றும் பணி நிபந்தனைகள்) விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இருக்கும்.

இந்த ஆணையானது மாண்புமிகு துணைநிலை ஆளுநரின் ஆணைப்படி வெளியிடப்பட்டது ஆகும்.
ஜனாஸ் ரஃபி என்கிற ஜான்சி சார்புச் செயலர் (சட்டம்)

0Shares