100 நாள் வேலை வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம்

Loading

திருவள்ளூர் அடுத்த ஒதப்பை கிராமத்தில் 100 நாள் வேலை வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும், அடிப்படை வசதிகள் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு :

திருவள்ளூர் நவ 05 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் ஒதப்பை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசின் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பெரும்பாலான பெண்கள் ஈடுபட்டு வந்தனர். நான் இந்த 2025-26 ஆம் ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் சேர்த்து இருப்பதாகவும் மீதமிருப்பவர்களை சேர்க்காமல் அலைக்கழித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதிகாரிகளிடம் கேட்கும் போது வேலைக்கான இடம் தேர்வு செய்து சொல்லுங்கள் என அலட்சியமாக கூறுவதால் 100 நாள் வேலை உறுதி திட்டத்தை நம்பியுள்ள பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அது மட்டுமல்லாமல் சாலை வசதி இல்லாதது குடிநீர் வசதி இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களுக்காகவும் கோரிக்கைகளாக அதிகாரிகளிடம் தெரிவிக்கும் போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பெண்கள் தெரிவித்தனர்.மேலும், அடிப்படை வசதிகளை செய்து தராமல், 100 நாள் வேலை உறுதி திட்டத்தை நம்பியுள்ள பெண்களுக்கு வேலை வழங்காமல் அலைக்கழித்து வரும் நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் ஓட்டு கேட்டு யாரும் வர அனுமதிக்க மாட்டோம் எனவும் பெண்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.
0Shares