’கிஸ்ஸிக்’ பாடல் – மனம் திறந்த ஸ்ரீலீலா!

Loading

புஷ்பா 2 படத்தில் ’கிஸ்ஸிக்’ பாடலில் நடனமாடி அனைவரையும் கவர்ந்தார் ஸ்ரீலீலா.

குண்டூர் காரம் , பகவந்த் கேசரி படங்களில் சிறப்பாக நடித்திருந்த ஸ்ரீலீலா தற்போது உஸ்தாத் பகத் சிங்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். புஷ்பா 2 படத்தில் ’கிஸ்ஸிக்’ பாடலில் நடனமாடி அனைவரையும் கவர்ந்த இவர், சமீபத்தில் வெளியான மாஸ் ஜதாரா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

சமீபத்திய ஒரு நேர்காணலில், சிறப்புப் பாடல்கள் குறித்து ஸ்ரீலீலா ஒரு சுவாரஸ்யமான பதிலைக் கொடுத்தார். புஷ்பா2 படத்தில் சிறப்புப் பாடலில் நடித்தது பற்றி ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை அவர் பகிர்ந்தார்.

புஷ்பா 2 படத்தில் சிறப்புப் பாடலில் நடித்தது வாழ்க்கையில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியதா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீலீலா, “ஆம், அந்தப் படம் என் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு பெரிய படத்தில் ஒரு பகுதியாக இருந்ததில் நான் பெருமைப்படுகிறேன் . அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமார் போன்ற திறமையானவர்களுடன் பணிபுரிந்தது ஒரு சிறந்த அனுபவம் என்று கூறினார். இந்தக் கருத்துக்கள் இப்போது வைரலாகி வருகின்றன.

0Shares