தேனி மாவட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள்

Loading

தேனி மாவட்டம்

ஊரக வளர்ச்சி  மற்றும் பேரூராட்சித் துறைகளின் சார்பில்    ரூ.5.06  கோடி  மதிப்பீட்டில் நடைபெற்று  வரும்  வளர்ச்சித்  திட்ட பணிகளை  மாவட்ட  ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள்  நேரில்  பார்வையிட்டு  ஆய்வு  மேற்கொண்டார்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்   நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்     திரு.ரஞ்ஜீத் சிங்,   இ.ஆ.ப., அவர்கள்  (04.11.2025)அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் (MLACDS) கீழ்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்                    ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுமான பணிகளையும்,   சிலமரத்துப்பட்டி ஊராட்சியில்  மாநிலங்களுக்கான மூலதன முதலீட்டு சிறப்பு உதவி திட்டத்தின் (SASCI) கீழ் ரூ.90.08 இலட்சம் மதிப்பீட்டில் போடி தேவாரம் சாலை முதல் அம்மாபட்டி பெருமாள்கவுண்டன்பட்டி வரை சாலை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதையும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்  கீழ் ரூ.3.10 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டப்பட்டு வருவதையும்,  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.15 இலட்சம் மதிப்பீட்டில் போடி-தேவாரம் சாலை முதல் சில்லமரத்துப்பட்டி வரை மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கும் பணிகளையும்

சிலமலை ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் (MLACDS) கீழ்  ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில்  கால்நடை மருந்தகம்  கட்டுமான பணிகளையும்,  பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் (MPLAD) கீழ்   ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக்கடை கட்டுமான பணிகளையும், முதல்வரின் வீடுகள் மறுகட்டுமான திட்டத்தின் (MVMT) கீழ்  தலா ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகள் மறுகட்டமைப்பு பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருவதையும், கிராமப்புற வீடுகளை புனரமைத்தல் திட்டத்தின் (RRH) கீழ்  ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில்  வீடு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும்,   கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்  கீழ் ரூ.3.10 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டார்.

 

அதனைத் தொடர்ந்து,  நாகலாபுரம் ஊராட்சியில்  குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் (CFSIDS) கீழ்  ஊராட்சி  ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.36 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுமான பணிகளையும்,  உப்புக்கோட்டை ஊராட்சியில் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்ட பொதுநிதியின் கீழ் (SIUS General Fund) குண்டல்நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  ரூ.6.20 இலட்சம் மதிப்பீட்டில்  பள்ளி கட்டடம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும்,  பாலார்பட்டி கள்ளர் நடுநிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 72.60 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுமான பணிகளையும்,

கூழையனூர் ஊராட்சியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் (CFSIDS) கீழ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்   ரூ.36 இலட்சம் மதிப்பீட்டில்  கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுமான பணிகளையும்,    என மொத்தம் ரூ.2.96 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட  பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர்,  பூதிப்புரம் பேரூராட்சியில்  ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் எரிவாயு தகன மேடை கட்டுமான பணிகளையும், போ.மீனாட்சிபுரம் பேரூராட்சியில்  தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல்  கட்டடம்  கட்டுமான பணிகளையும் மற்றும் சிறப்பு நிதிதிட்டத்தின் கீழ் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் பொட்டல்களம் தார்ச்சாலை பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேற்குறிப்பட்ட பணிகளை அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இவ்வாய்வுகளில்  பூதிப்புரம் பேரூராட்சித் தலைவர் திரு.கவியரசு, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.வில்லியம் ஜேசுதாஸ், செயற்பொறியாளர் திரு.சுந்தரேசன்,  உதவி செயற்பொறியாளர் திரு.மணிமாறன்,  வட்டார வளர்ச்சி அலுவலர்  திருமதி மலர்விழி, உதவிபொறியாளர்கள் திருமதி சோனா, திரு.விவேகானந்தன், செயல் அலுவலர்கள் திரு.ராஜேஸ் அய்யனார் முருகன் திருமதி யோகஸ்ரீ,  உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி.

0Shares