வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்
![]()
தேனி மாவட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் (03.11.2025) அன்றுவாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision) பணிகள் நடைமுறைக்கு வரப்பெற்று, தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிக்களுக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் மேற்கொள்ள 1,394 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (Booth Level Officer – BLO) ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் மேற்கொள்வது குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தால் குறிப்பிட்டுள்ளபடி 04.11.2025 முதல் 04.12.2025 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இல்லம் தோறும் சென்று, கணக்கெடுப்புப் படிவம் அனைத்து வாக்காளர்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட வாக்காளர்களால் விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர், அதனை திரும்ப பெற்று அப்படிவங்கள் கணினியில் பதிவேற்றம் செய்து வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
அதன்படி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் வட்டாட்சியர் திரு.ஜாஹிர் உசேன் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி.

