துடியலூர் அருள்மிகு மாகாளியம்மன் சிறப்பு பூஜை
![]()
கோவை
துடியலூர் அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோவில்
3 நாள்கள் மஹா ஹோமங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள்
முதல் நாள் 11 வகை ஹோமம் மற்றும் அன்னதானம்

கோவை துடியலூர் அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோவில் சமுதாய கல்வி சேவா அறக்கட்டளை சார்பில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 3ம் தேதி வரை 3 நாட்கள் 21 மஹா ஹோமங்களும் 18 சிறப்பு பூஜைகளும் கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் முதல் நாளில் 11 வகையான ஹோமங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. மேலும் 3 நேரம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கோவை துடியலூரில் சுயம்புவாக எருந்தருளியுள்ள அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோவில் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது. பார்வதி தேவியின் நேரடி அவதாரமான மாகாளியம்மன் இங்கு எருந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார்.
இத்தகைய சிறப்புமிக்க இக்கோவிலில் துடியலூர் அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோவில் சமுதாய கல்வி சேவா அறக்கட்டளை சார்பில் பக்தர்களும், பொதுமக்களும் அவர்களது சந்ததியினரும் தடை, தோசம், தீய சக்திகள், கர்ம வினைகள் நீங்கப் பெற்று, வாழ்வில் பாதுகாப்பு, ஆரோக்கியம், செழுமை, வளர்ச்சி, விவாகம், வம்சவிருத்தி மற்று புகழ் பெற வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 3ம் தேதி வரை 3 நாட்கள் 21 மஹா ஹோமங்களும் 18 சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.
முதல் நாளான இன்று காலை 6 மணிக்கு மஹா கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து 1008 மஹா ஆயுஷ் மிருத்யுஞ்சய ஹோமம், 1008 மஹா அகோர பஞ்சசரி ஹோமம், 1008 மஹா சர்ப பஞ்சசரி ஹோமம், 1008 மஹா சுதர்சன ஹோமம், 1008 மஹா சத்ரு சம்ஹார நரசிம்ம ஹோமம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு மஹா வராஹா பூமி தோஷ பரிகார ஹோமமும், மாலை 5 மணிக்கு 1008 மஹா சூலினி துர்கா ஹோமம், 1008 மஹா பிரத்தியங்ரா ஹோமம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு 1008 மஹா காளீஸ்வரி ஹோமம், 1008 மஹா துர்கா பரமேஸ்வரி ஹோமம், மஹா தோஷ ஆவாஹனா பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 10 மணியளவில் மகா தீபாரதனையுடன் முதல் நாள் வேல்வி நிறைவடைந்தது.
இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து திராளானவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைகளும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துடியலூர் அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோவில் சமுதாய கல்வி சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

