காளியம்மன் திருக்குட நன்னீராட்டு பெருவிழா

Loading

சேலம்
அருள்மிகு சக்தி காளியம்மன் திருக்கோயில் புனருத்தாரண அஷ்டபந்தன திருக்குட நன்னீராட்டு பெருவிழா
சேலம் மாவட்டம் அரிசிபாளையம் நாராயணசாமிபுரம் அருள்மிகு சக்தி காளியம்மன் திருக்கோயில் புனருத்தாரண அஷ்டபந்தன திருக்குட நன்னீராட்டு பெருவிழா, விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம்16 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் கால யாக வேள்வி பூஜை, பூர்ணாஹுதி பூஜை, தீபாராதனையும் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை மூன்றாம் கால யாக வேள்வி, பூர்ணாஹுதி பூஜை, தீபாராதனை நடைபெற்ற அன்னதானம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஐப்பசி 17ஆம் நாள் திங்கட்கிழமை நான்காம் கால யாக வேள்வி ,மஹா பூர்ணாஹீதி பூஜை, மகா தீபாராதனையை தொடர்ந்து, அருள்மிகு சக்தி காளியம்மன் கோபுர விமானம் மற்றும் மூலவர் அருள்மிகு சக்தி காளியம்மன் நன்னீராட்டு பெருவிழா,(கும்பாபிஷேக விழா) மஹாபிஷேகம், தசா தரிசனம், தசதானமும், கவுன்சிலர் சவிதா பிரகாஷ் அவர்கள் சார்பாக சிறப்பு அன்னதானமும் நடைபெற உள்ளது.
அருள்மிகு சக்தி காளி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவினை, செயல் அலுவலர் ரவிச்சந்திரன், தலைவர் அறங்காவலர் குழு கிருஷ்ணன், அறங்காவலர்கள் கலா, தயாளன், ராஜா, கண்ணன்,  திருக்கோயில் எழுத்தர் திருமதி.நாகராணி, திருக்கோயில் அர்ச்சகர் ஜெய் உமாபதி ராஜேந்திரன், நாதஸ்வரவித்வான் எம்.சி.மணி, ஸ்தபதி ஸ்டாலின் சிற்பி, கும்பாபிஷேக சர்வ சாதகம் வீரசைவ ம.பரமேஸ்வரன் சிவாச்சாரியார், வீரசைவ ப.சிவசித்தையர் மற்றும் திருப்பணி உபயத்தார்கள், திருக்கோயில் பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு விழா சிறப்பாக நடைபெறுகிறது.
0Shares