கோவை 18வது பதிப்பு கோலாகலமாக துவக்கம் 

Loading

கோவை
கோவை விழாவின் 18வது பதிப்பு கோலாகலமாக துவக்கம் 
கோவை நாடாளுமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி மற்றும்  காவல் ஆணையர்கள் துவக்கி வைத்தனர் 
கோவை மாநகரின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பன்முக சமூக உணர்வுகளைக் கொண்டாடும் விதமாக, கடந்த 17 ஆண்டுகளாக கோவையை சேர்ந்த பல்வேறு அமைப்புகளும், கோயம்புத்தூர் மக்களும் இணைந்து கோயம்புத்தூர் விழா எனும் பிரம்மாண்ட திருவிழாவை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவை விழாவின் 18வது பதிப்பு, ‘இன்ஃபினிட்டி எடிஷன்’ என்ற பெயரில் துவங்கப்பட்டது. இதனை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் ஆகியோர்துவக்கி வைத்தனர். கோவை ப்ரூக்ஃபீல்ட்ஸ் வணிக வளாகத்தில் நடைபெற்ற துவக்கவிழாவில்,  கோவை விழா 2025ன்  தலைவர் சண்முகம் பழனியப்பன், யங் இந்தியன்ஸ் – கோவை அமைப்பின் தலைவர் நீல் கிக்கானி மற்றும் பல்வேறு விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்மேலும் இதுகுறித்து கோவை விழா 2025ன் தலைவர் சண்முகம் பழனியப்பன் கூறியதாவது..
இந்த ஆண்டு கோவை விழாவின் 18வது ஆண்டாக உள்ளது. இதில் 8 எனும் எண் முடிவில்லா தன்மையை குறிக்கும் இன்ஃபினிட்டி வடிவத்தை போல உள்ளதால், கோவையின் முடிவில்லா ஆற்றலை கொண்டாடுவோம் என்பதை குறிக்கும் நோக்கில் இந்த பதிப்பு ‘இன்ஃபினிட்டி எடிஷன்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த விழா நவம்பர் 14 முதல் நவம்பர் 24, 2025 வரை 11 நாட்களுக்கு நடைபெற உள்ளது. சுமார் 150க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் திட்டமிடப்பட்டு, நகரம் முழுவதையும் ஒன்றிணைக்கும் பொதுவான கருத்தை இவை கொண்டு செல்லும் என்று அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது
0Shares