கணவன் மனைவி கருத்து வேறுபாடு

Loading

திருவள்ளூர் அருகே கணவன் மனைவி கருத்து வேறுபாட்டால் தனியாக வசித்து வந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை :
திருவள்ளூர் நவ 02 : ராணிப்பேட்டை மாவட்டம் ஜோதி நகரைச் சேர்ந்தவர் பலராமன் மனைவி கலாவதி (62). இவர்களது மகன் முருகனுக்கு கடந்த 16 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக தனியாக திருவள்ளூர் அடுத்த சிறுவானூர் கண்டிகை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
 இந்நிலையில் உறவினர் வெங்கடேசன் வேலைக்கு அழைத்துச் செல்வதற்காக வீட்டில் வந்து பார்த்த போது தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து வெங்கடேசன் தாய் கலாவதிக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்து பார்த்துள்ளார். இதுகுறித்து தாய் கலாவதி புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.
0Shares