உழவர் நலத்துறை விவசாயிகள் நலன் காக்கும் நாள்

Loading

திருவள்ளூர் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் 13 பேருக்கு ரூ.9,14 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார் :
திருவள்ளூர் நவ 02 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கி பேசினார்.
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ்; பசுந்தாள் உர சாகுபடியினை ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டு 7500 ஏக்கரில் ரூ.93.73 இலட்சம் மானியத்தில் பசுந்தாள் உர பயிர் பயிரிட திட்டமிடப்பட்டு விவசாயிகளுக்கு தற்பொழுது வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் பசுந்தாள் உர விதைகள் ஒருகிலோ முழு விலையாக ரூ.129.4 இதில் 50 சதவீதம் மானியத்தில் ரூ.62.50 வழங்கப்பட்டு வருகிறது.
தொழில் முனையும் வேளாண் பட்டதாரிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் ரூ.10 லட்சம் அல்லது 20 லட்சம் மதிப்பில் விதைகள் உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் விற்பனை மையம், நோய் மற்றும் பூச்சி மேலாண்மை, மதிப்புகூட்டு பொருட்கள் வேளாண் உயர் தொழில்நுட்பம்  மற்றும் இதர பிரிவுகளில் தொழில் தொடங்க 30% மானியம் வழங்கப்படும்.  கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் திட்டத்தின் கீழ் 155 எண்கள் விசைத்தெளிப்பான்கள் இலக்கு பெறப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றம், திருவள்ளூர் மற்றும் திருத்தணி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் (e-NAM) திட்டத்தில் வேளாண் விளைபொருட்களுக்கான மறைமுக ஏலம் மூலம் நல்ல விலை கிடைக்க வழிவகை செய்கிறது. இடைத்தரகர் இன்றி விற்பனை செய்யப்பட்டு பணம் நேரடியாக வங்கி கணக்கு வரவு வைக்கப்படுகிறது என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து வேளாண்மை – உழவர் நலத்துறை துறை சார்பில் 2 விவசாயிகளுக்கு மானிய விலையில் 100 கிலோ நிலக்கடலை மற்றும் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை சார்பில் 1 விவசாயிக்கு பண்ணை குட்டை அமைக்க ரூ.75,000 மானியமும், கூட்டுறவுத் துறை சார்பில் 10 விவசாயிகளுக்கு ரூ.8,11,874 மதிப்பிலான பயிர் கடனுக்கான ஆணைகள் என மொத்தம் 13 விவசாயிகளுக்கு ரூ.9,14,874 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார்.மேலும்  இக்கூட்டத்தில் 180-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பால்ராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இணை பதிவாளரும் செயலாட்சியருமான மீனா அருள்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வேதவல்லி,வேளாண்மை துணை இயக்குநர் ஸ்ரீ சங்கரி, கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குநர் ப.ஜெயந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares