கோவை இந்திராகாந்தியின் நினைவு தினம்

Loading

கோவை மாவட்டம் புலியகுளம் அடுத்த பெரியார் நகர் 64வது டிவிசன் பகுதியில் கோவை மாவட்ட பஞ்சாயத்து ராஜ், காங்கிரஸ் கமிட்டி சார்பாக அன்னை இந்திரா காந்தியின் 41வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் புலியகுளம் பெரியார் நகரில், கோவை மாவட்ட பஞ்சாயத்து ராஜ், காங்கிரஸ் கமிட்டி சார்பில் அன்னை இந்திரா காந்தியின் 41வது நினைவு தினம் அனுசரிக்க பட்டது. இதில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அன்னை இந்திராகாந்தியின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் அவரது நினைவுகளை அனைத்து பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் எடுத்து கூறப்பட்டது. கோவை மாவட்ட ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ், காங்கிரஸ் கட்சியின் தலைவர் எம். எஸ். பார்த்திபன் தலைமை தாங்கினார். இதில் சர்க்கிள் தலைவர் கனேசன், ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் மண்டல தலைவர் மோகன்ராஜ், முன்னிலை வகித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில், சிங்கை செல்வராஜ், செந்தில்குமார், சிவாஜி ராஜன், அமுல்ராஜ், காலனி பிரபு, சானவாஷ், மணிகண்டன், ஆனந்த்ராஜ், வில்சன், ஆறுமுகம், வெங்கடாசலம், கல்லிமடை பாலு, ரமேஷ், சுப்ரமணி, காட்டு ராஜா, உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டு அவரது திருவுருவச் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அன்னை இந்திரா காந்தி நினைவு தினத்தை அனுசரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares