மெத்தபெட்டமைன் போதைப் பொருள் கடத்தல்
![]()
திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனத்தில் சுமார் ரூ.3.5 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப் பொருளை கடத்திய நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது :
திருவள்ளூர் அக் 31 : திருவள்ளூர் வழியாக மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா உத்தரவின் பேரில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர் .
அப்போது திருவள்ளூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வெங்கத்தூர் பகுதியில் மணவாளநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஃபாருக் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது புல்லட் வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தபோது அவரிடம் இருந்து சுமார் ரூ.3.5 கோடி மதிப்பிலான 35 கிராம் மெத்தபட்டமைன் போதை பொருளை கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது நைஜீரிய நாட்டைச் சேர்ந்த மைக்கேல் நம்பி எனவும் தெரிய வந்ததையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பின் புழல் சிறையில் அடைத்துள்ளனர். வாகன சோதனையின் போது நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இளைஞரிடம் ரூ.3.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

