சமூகஆர்வலருக்கு மனிதநேய மங்கையர்திலகம் விருது
![]()
நாகப்பட்டினம் அக்-31
வேதாரண்யம் சமூக ஆர்வலருக்கு மனிதநேய மங்கையர் திலகம் விருது – இயக்குனர் பேராசிரியர் பழனிமுத்து வழங்கினார்
தஞ்சாவூர் பெசன்ட் வளாகத்தில், தஞ்சை மூத்த குடிமக்கள் நலச்சங்க, மனமகிழ் சங்கம கூட்டம் தென்னை விஞ்ஞானி டாக்டர் வா.செ.செல்வம் தலைமையில் நிறுவனர் புலவர் ஆதி.நெடுஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றது
சமூக ஆர்வலர் திருமதி.வசந்தா சித்திரவேலு அவர்கட்கு “மனிதநேய மங்கையர் திலகம்” என்னும் விருதினை சங்கத்தினர் அன்பு வேண்டுகோளை ஏற்று சங்கத்தின் சார்பில் தேசிய உணவுத்தொழில் ‘நுட்பம் தொழில் மேம்பாடு (மைய அரசு) மேலாண்மை நிறுவன இயக்குநர், தஞ்சாவூர் பேராசிரியர் டாக்டர். வி.பழனிமுத்து அவர்கள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள். திருமதி. வசந்தாசித்திரவேலு ஏற்புரை நிகழ்த்தினார்கள். கூட்டத்தில் வாழமரக்கோட்டை வி.எஸ்.இளங்கோவன் ஓய்வுபெற்ற ஆசிரியர் சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினர்.

