நத்தம்பேடு 34 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்
![]()
வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டு தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நத்தம்பேடு பகுதியை சேர்ந்த 34 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் : அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :
திருவள்ளூர் அக் 30 : திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம், நத்தம்பேடு ஊராட்சி பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் கனமழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டு அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள நத்தம்பேடு பகுதியை சேர்ந்த 34 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மளிகை பொருட்கள், ரொட்டி, பால், உடை, பாய், குடை, தலையனை உள்ளிட்ட நிவாரண தொகுப்புகளை வழங்கி, காலை சிற்றுண்டியை பரிமாறி பேசினார்.
நத்தம்பேடு பகுதியில் ஏற்பட்டிருக்கின்ற கனமழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஏரிக்குள் குடியிருந்தவர்களை தற்காலிக முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உடை, பாய், தலையனை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் மற்றும் உணவு உள்ளிட்டவைகளை வழங்கி பாதுகாப்பாக மாவட்ட ஆட்சியர் தங்க வைத்துள்ளார். நத்தம்பேடு பகுதியைச் சேர்ந்த 34 குடும்பங்களை தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கோரிக்கை அடிப்படையில், ஏரி உள்வாய் நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ளவர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சரிடம் கொண்டு சென்று மாற்று இடங்களில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
இதில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.சசிகாந்த் செந்தில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) யுவராஜ், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் வட்டாட்சியர் பாலாஜி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

