தெருநாய்களால் பொதுமக்கள் உயிரிழப்பு
![]()
காக்களூர் ஊராட்சியில் சுற்றித்திரியும் தெருநாய்களால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் உயிரிழப்பு: ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாததால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு :
திருவள்ளூர் அக் 30 : தமிழகம் முழுவதும் தெரு நாய்கள் கடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதேபோல் திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சியில் முக்கிய சாலைகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன.

மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் இருந்து காக்களூர் வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நடந்து செல்பவர்கள் முதியவர்கள் எங்கே நாய்கள் கடித்து விடுமோ என்ற அச்சத்தில் சாலையை கடந்து செல்கின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சாலைகளில் சுற்றி திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.