முதலாளியை கொன்ற டிரைவர் காவல்நிலையத்தில்!

Loading

கோவையில் முதலாளியை கொன்ற டிரைவர் காவல் நிலையத்தில் சரண்! 
கோவை பன்னிமடை ஊராட்சி முன்னாள் தலைவரும், அதிமுக கட்சியின் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கவிசரவணகுமார் என்பவரது மனைவி 47 வயதான மகேஸ்வரி என்பவரை அவர்களது டிரைவர் 45 வயதான சுரேஷ் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரண்டந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பாடுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் தடாகம் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை துடியலூர் அருகே பன்னீர் மடையை அடுத்த தாளியூர் பகுதியில் குடியிருந்து வருபவர் முன்னாள் அதிமுக மாவட்ட கவுன்சிலரும், பன்னிமடை ஊராட்சி முன்னாள் தலைவருமான கவி சரவணகுமார். இவரது மனைவி 47 வயதான மகேஸ்வரி.
இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் அவர்களது வீட்டில் டிரைவராக வேலை செய்து வரும் சுரேஷ் என்பவர் கவி சரவணகுமாரின் மனைவி மகேஸ்வரியை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி வடவள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
தகவல் அறிந்து வீட்டிற்கு வந்த கவி சரவணகுமார் இதுகுறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் சம்பவ இடத்திற்கு வந்த தடாகம் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சரணடைந்த ஓட்டுநர் சுரேஷிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0Shares