ஒட்டன்சத்திரம் 8-வது  வார்டில்  கிராம சபா கூட்டம் 

Loading

ஒட்டன்சத்திரம் நகராட்சி 8-வது  வார்டில்  கிராம சபா கூட்டம் 
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட 8-வது  வார்டில் கிராம சபா கூட்டம்  ஒட்டன்சத்திரம் நகர்மன்ற தலைவர் க.திருமலைசாமி தலைமையில் நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் சுவேதா முன்னிலை வகித்தார். ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 8 வது வார்டு பகுதியில்  தாராபுரம் சாலையில் இருந்து தும்மிச்சம்பட்டி வடக்குதெரு விலிருந்து வர்த்தகநகர்  செல்லும்  சாலையின் இருபுறமும் கழிவுநீர் செல்லும் கால்வாய் புதியதாய் கட்டி தருவதற்கான  தீர்மானம் மற்றும் தும்மிச்சம்பட்டி வடக்கு தெரு பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு ஊர் பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும்  காலங்காலமாய் இருந்து வந்தத தும்மிச்சம்பட்டி ஆதிதிராவிடர் தெரு எனற பெயரை தற்போது தும்மிச்சம்பட்டி வடக்குத்தெரு  என பெயர்மாற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இந்த கிராம சபா கூட்டத்தில் ஒட்டன்சத்திரம் நகராட்சி வருவாய் ஆய்வாளர் விஜயபால்ராஜ், நகராட்சி தூய்மை பணிமேற்பார்வையாளர் காமராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.
0Shares