சோழவரம் ஊராட்சிகளில் பனை விதை நடும் நிகழ்ச்சி

Loading

எல்லாபுரம் மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றியங்களில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார் :

திருவள்ளூர் அக் 28 : திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம்  குமாரப்பேட்டை ஊராட்சியில் ஆரணி ஆற்றின் கரையோர பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை மற்றும் நீர்வளத்துறை ஆகிய துறைகள் சார்பாக பனை விதைகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து, பின்னர், சோழவரம் ஊராட்சி ஒன்றியம் நெற்குன்றம்  ஊராட்சி வேட்டைக்கார பாளையம் கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள குளத்தை சுற்றியுள்ள பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் வனத்துறை ஆகிய துறைகள் சார்பாக பனை விதைகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் துவக்கி வைத்து பேசினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையில் பல்வேறு பணிகள் அனைத்து துறை அலுவலர்கள் சேர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். மழை நீர் தேங்கிய இடங்களில் நீர் இறைப்பது, தேவையான இடங்களில் சாலைகளை சீரமைத்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கும் வசதிகள், உணவுப் பொருட்கள் மற்றும் பல்வேறு வசதிகளை செய்து உள்ளனர். பெரும்பாலான இடங்களில் தேங்கிய தண்ணீர் முழுவதும் அகற்றப்பட்டு விட்டது. ஓரிரு தாழ்வான பகுதிகளில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது. அந்நீரையும் இன்று மாலைக்குள் வெளியேற்றப்படும். மக்களுக்கு பெரும்பாலும் அதிகமான இடங்களில் எவ்வித பாதிப்பும் இல்லை.

26 மற்றும் 27 தேதிகளில் புயல் வரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் மழை அதிகமாக இருந்தாலும் அதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளை  மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்றரை இலட்சம் பணம் விதைகளை புதியதாக வெட்டிய குளங்கள்,  தூர்வாரிய வாய்க்கால்கள் மற்றும் அதனுடைய கரையோரங்களில் நடுவதற்கான பணிகளை இன்றைக்கு  தொடங்கி வைத்திருக்கிறோம். இன்றைக்கு ஆயிரம் பனை விதைகளை உடனடியாக நட்டு இருக்கிறோம், ஒன்றரை லட்சம் பனை விதைகள் இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குள் அனைத்து ஊராட்சிகள்,  வட்டாரங்களிலும் ஊரக வளர்ச்சி துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் சேர்ந்து நட இருக்கிறார்கள். பனை இயக்கம் என்ற சிறப்பான தனி இயக்கதிற்கு வலு சேர்க்கும் விதமாக நாமும் இப்பணியை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறோம் என மாவட்ட ஆட்சியர்  கூறினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ராஜவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை வேதவல்லி, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் விஜயராகவன், வன விரிவாக்க அலுவலர் லட்சுமண குமார் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares