சேலத்தில் “அப்பலோ பல் கிளினிக்” திறப்பு விழா
![]()
சேலத்தில் “அப்பலோ பல் கிளினிக்” திறப்பு விழா !
சேலம், அண்ணா பூங்கா எதிரில் என்.பி.ஆர். வளாகத்தில் புதிய “அப்பலோ பல் கிளினிக்” திறப்பு விழா நடைபெற்றது. இதில் ,சேலம் முன்னாள் எம்.பி. திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளருமான எஸ். ஆர்.பார்த்திபன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். என்.பி.ஆர் மசாலா மற்றும் ஆசியன் ஸ்பைஸ் சேர்மன் ஆர். உதயகுமார், பாபு ஜுவல்லர்ஸ் சேர்மன் எஸ்.பாபு, ஓய்வு பெற்ற மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளர் எஸ்.கோவிந்தன், ஓய்வு பெற்ற மின்வாரிய செயற்பொறியாளர் ரவி ராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகவும் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இந்த “அப்பலோ பல் கிளினிக்” சிறப்பு விழாவிற்கு வருகை புரிந்தவர்களை இன்ஜினியர் ஆர்.நளினா, இன்ஜினியர் கே.தணிகை அருள், விஜயா தண்டாயுதபாணி ஆகியோர் வரவேற்றனர்.

