வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நாசர் ஆய்வு
![]()
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழவேற்காடு முகத்துவாரம் பகுதி மற்றும் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழை நீர் அகற்றும் பணிகள் : அமைச்சர் சா.மு.நாசர் நேரில் ஆய்வு :
திருவள்ளூர் அக் 28 : பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம், காட்டுப்பாக்கம் ஊராட்சி, ஸ்ரீநகர் பகுதி மற்றும் நசரத்பேட்டை ஊராட்சி, யமுனா நகர் பகுதியில் தேங்கியுள்ள மழை நீர் அகற்றும் பணிகள் தொடர்பாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
திருநின்றவூர் நகராட்சிக்குட்பட்ட ஈசா ஏரி பகுதியில் நீர்வளத்துறை சார்பில் ரூ.9.3 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிக்கால்வாய் அமைக்கும் பணிகளையும், பொன்னேரி வட்டம் தத்தமஞ்சி ஊராட்சி ஆரணியாற்றின் கரையோரப் பகுதிகள் பலப்படுத்தப்பட்டுள்ள பணிகள் தொடர்பாகவும், பொன்னேரி வட்டம், பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் ரூ.27 கோடி மதிப்பீட்டில் மணல் திட்டுக்கள் உருவாவதை தடுக்கும் வகையில் நடைபெறும் நிரந்தர முகத்துவாரம் அமைக்கப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மீனவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்து உரிய தீர்வுக்கான சம்மந்தப்பட்ட துறை அமைச்சர் உள்ளிட்ட துறை உயர் அலுவலர்களிடம் தெரிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.மேலும் அவர் கூறியதாவது :
பருவமழை தொடங்குவதற்கு முன்பே எங்கெல்லாம் மழை வெள்ளம் ஏற்படுமோ அந்த இடங்கள் எல்லாம் நேரடியாக கள ஆய்வு செய்து வருகின்றனர். அங்கு வாழ்கின்ற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்கி தர வேண்டும் என்று பூவிருந்தவல்லி பகுதிகளில் பல்வேறு இடங்களில் உள்ள கால்வாய்களை பார்வையிட்டும் , துரிதமான பணிகளை ஏற்பாடு செய்து அங்கு உள்ள நீர் வழித்தடங்களை எப்படி சரி செய்வது என்று ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து திருநின்றவூர் ஈசா ஏரியினை அங்கு நடைபெற்று வரும் பணிகளை நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், வரும் நாட்களில் கனமழை இருக்கும் பட்சத்தில் அதனை எப்படி சரி செய்வது அதற்கான முன்னேற்பாடு பணிகள் செய்ய வேண்டும் என்பதை ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் பழவேற்காட்டில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது வடகிழக்கு பருவ மழையை கையாளுவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பொது மக்களை வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாத்திட தயார் நிலையில் உள்ளோம் என கூறினார்.
இதில் திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கே.பி.கார்த்திகேயன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப்,பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் அ.கிருஷ்ணசாமி, ஆவடி மாநகராட்சி ஆணையர் ரா.சரண்யா,மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குனருமான வை.ஜெயக்குமார், கொசஸ்தலையாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், திருநின்றவூர் நகர்மன்ற தலைவர் உஷாராணி ரவி, திருநின்றவூர் நகராட்சி ஆணையர் ஜீவிதா, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், பொன்னேரி சார் ஆட்சியர் கு.ரவிக்குமார்,பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம்,உதவி இயக்குநர் (மீன் வளத்துறை) அஜய் ஆனந்த், ஆரணியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

