69நெல் கொள்முதல் நிலையம்ஆட்சியர் பிரதாப் தகவல்
![]()
திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் 69 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், அரசு கிடங்குகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்கள் : மாவட்ட ஆட்சியர் மு-பிரதாப் தகவல் :
திருவள்ளூர் அக் 28 : திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு சொர்ணவாரி (2025-26) பருவத்தில் 26436 ஹெக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் 69 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அரசு கிடங்குகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் செயல்பட்டு வருகிறது.
சன்ன ரக நெல் – 1 குவிண்டால் ரூ 2545-ற்கும், பொது ரக நெல் – 1 குவிண்டால் ரூ 2500-ற்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் KMS 2025-2026 ஆம் ஆண்டு நடப்பு சொர்ணவாரி பருவத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் சார்பாக 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 6963 விவசாயிகளிடமிருந்து 49615 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்து, தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் சார்பாக 6 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 903 விவசாயிகளிடமிருந்து 8705 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 7866 விவசாயிகளிடமிருந்து 58320 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2726 விவசாயிகளிடமிருந்து சுமார் 15000 மெ.டன் கொள்முதல் செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளுக்கு நகர்வு செய்யப்பட்டு வருகிறது.கொள்முதல் செய்யப்பட்ட 19605 மெ.டன் நெல் கிடங்குகளிலும் 25907 மெ.டன் நெல் அரவை முகவர்களின் ஆலைகளிலும் இருப்பு வைக்கப்பட்டு அரவைக்கு தயார் நிலையில் உள்ளது. மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 4387 மெ.டன் தரை இருப்பில் உள்ளது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லினை அரவை முகவர்களுக்கு வழங்கி அதற்கான கண்டுமுதல் அரிசியினை இம் மாவட்டத்தில் உள்ள பொது விநியோக திட்டத்திற்கும் மற்றும் வெளி மாவட்டங்களுக்கும் நகர்வு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 7866 விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு அதற்கான கிரயத்தொகையினை 7648 விவசாயிகளுக்கு ரூ.145.89 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மு-பிரதாப் தெரிவித்தார்.

