மாணவர்களுக்கு இராஜவேல் பட்டங்களைவழங்கினார்
![]()
யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2வது பட்டமளிப்பு விழா
பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் இராஜவேல்
271 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்
கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் இராஜவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 271 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவானது கல்லூரியின் சரஸ்வதி கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது.
யுனைடெட் கல்வி குழுமத்தின் நிறுவனர் மற்றும் பொறியாளர் சண்முகம் தலைமை வகித்தார். யுனைடெட் கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் முனைவர் கைலாஷ் குமார், செயலாளர் அருண் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆ விஜயா வரவேற்புரை வழங்கி ஆண்டறிக்கையை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் இராஜவேல் கலந்து கொண்டு பட்டமளிப்பு உரையாற்றி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். அவர்தம் உரையில் உயர்கல்வியின் மேன்மை குறித்தும், ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே சிறப்பிற்குரியது என்றும், மாணவர்கள் தற்கால தொழில்நுட்ப அறிவை பெற்று, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த துறையிலே ஆக்கப்பூர்வமாக செயலாற்றி சமூகத்திற்கு நன்மை நல்கும் வண்ணம் வாழ வேண்டும் என்று எடுத்துரைத்து உரையாற்றினார்.
பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கிடையேயான தரவரிசையில் வணிகவியல் துறையில் முதலிடம் பெற்று தங்க பதக்கம் பெற்ற மாணவி சௌமி மற்றும் மாணவி நவீனா, மேலாண்மை துறை சார்ந்த மாணவி ஆஷிகா ஆகியோருக்கு சிறப்பு பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேலும் தரவரிசையில் இடம் பெற்ற நான்கு மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதில் வணிகவியல், கணினி அறிவியல் மற்றும் ஆங்கில இலக்கியம் துறை சார்ந்த 271 மாணவர்கள் பட்டங்களை பெற்றார்கள். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக சிறப்பு விருந்தினர்களுக்கு கல்லூரி சார்பாக சிவப்பு கம்பள வரவேற்புடன் என் சி சி மாணவர்கள் பேண்டு வாத்தியம் முழங்க அணிவகுப்பு மரியாதை வழங்கினர்.

