மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி தொழிலாளி பலி

Loading

கல்பட்டு கிராமத்தில் மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதிய விபத்தில் விவசாய பண்ணை தொழிலாளி பலி :

திருவள்ளூர் அக் 25 : திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மெய்யூர் ஊராட்சி மேட்டுத் தெருவில் வசித்து வந்தவர் ராஜ்குமார்(45). திருமணம் ஆன இவருக்கு அம்மு என்ற பிரத்தியா என்ற மனைவியும், ஒரு மகள்,ன ஒரு மகன் உள்ளனர். இவர் வேம்பேடு கிராமத்தில் உள்ள சங்கர் ஃபார்ம் ஹவுஸ் என்ற விவசாயம் பண்ணையில் கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில்,நேற்று விவசாய பண்ணைக்கு தேவையான பொருட்களை வாங்கி வர தனது மோட்டார் சைக்கிளில் வெங்கல் பஜார் வீதிக்கு சென்றவர் பொருட்களை வாங்கிக்கொண்டு வெங்கல்- சீத்தஞ்சேரி நெடுஞ்சாலையில் கல்பட்டு கூட்டுரோடு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மினி வேன் ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராஜ்குமார் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்த வெங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான ராஜ்குமார் உடலை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,வழக்கு பதிவு செய்து இந்த விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.மேலும், தலைமறைவான மினி வேன் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0Shares