திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு
![]()
ஆவடியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் :
திருவள்ளூர் அக் 25 : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமை தாங்கினார்.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களை கண்டறிந்து நீர் இறைக்கும் இயந்திரங்களை கொண்டு மழை நீர் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
நீர் வழி பாதை செல்லும் இடங்களை கண்டறிந்து இயந்திரங்களைக் கொண்டு ஆழப்படுத்தி மழைநீர் விரைவாக வெளியேறுவதற்கான பணிகளை துரிதமாக செயல்பட வேண்டும். ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஜோதி நகர், பருத்திபட்டு, வசந்தம் நகர் மற்றும் திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர், இந்திரா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களிலும் திருவேற்காடு மற்றும் பூவிருந்தவல்லி யமுனா நகர் ஆகிய பகுதிகளில் தாழ்வான இடங்களை கண்டறிந்தும் மற்றும் மழைநீர் சாலைகளில் தேங்காதவாறு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் மழை காலங்களில் தேவையான கூடுதலான 50HP, 30HP, 20HP இயந்திரங்கள், மரம் அறுக்கும் தானியங்கி இயந்திரங்கள், பொக்லைன், ஜேசிபி அனைத்து நகராட்சிகளிலும் அலுவலர்கள் மூலம் தேவையான இடங்களில் வைத்திருக்க வேண்டும். மின்சார வாரியம் சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தாழ்வான பகுதிகளில் செல்லும் ஒயர்கள் மற்றும் பழுதடைந்த மின் கம்பங்கள் இருந்தால் அவற்றை உடனடியாக மாற்றி சரி செய்ய வேண்டும்.
மக்களுக்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை தங்க வைப்பதற்கான தற்காலிக முகாம்களை அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதிகள், உணவுகள், குடிநீர், பால் மற்றும் ரொட்டி மாதிரி தேவையான பொருட்கள் அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மருத்துவ குழு மற்றும் மருத்துவ முகாம்கள், அவசர ஊர்திகள், பாய், போர்வைகள் மற்றும் தேவையான வசதிகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும்.திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பாதிப்பினால் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் அறிவுறித்தினார்.
கூட்டத்தில் ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையாளர் ரா.சரண்யா,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயகுமார், ஆவடி துணை காவல் ஆணையாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா,ஆவடி மாநகர பொறியாளர் ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், முதல் நிலை அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

